"கப்பல்ல ஏறின ஒரு பெண்ணை காணோம்"..கேப்டனுக்கு பறந்த தகவல்.. நடுக்கடல்ல நிறுத்தப்பட்ட சொகுசு கப்பல்.. ஆபிசர்கள் சொல்லிய ஷாக் நியூஸ்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்பெயினில் சொகுசு படகில் பயணம் செய்த ஒரு பெண்ணை காணவில்லை என தகவல் அளிக்கப்பட்டதையடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது மீட்புக்குழு.

சொகுசு கப்பல்
தென்மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் இருந்து நேற்று கிளம்பிய Azamara Quest என்னும் சொகுசு கப்பல் தற்போது மொரோக்கா நாட்டின் அருகே உள்ள கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் தலைநகர் பார்சிலோனாவில் இருந்து 4 நாள் பயணத்திற்கு புறப்பட்ட இந்த கப்பலில் பயணித்த மத்திய வயதுடைய ஒரு பெண்மணியை காணவில்லை என அறிவித்திருக்கிறது கப்பல் நிர்வாகம்.
பதறவைத்த தகவல்
பார்சிலோனாவில் இருந்து கிளம்பிய இக்கப்பலில் இருந்த பெண்மணி ஒருவர் கடல் நீரில் விழுந்துவிட்டதாக கேப்டனுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனை அடுத்து கடலோர காவல்படையை தொடர்புகொண்ட கேப்டன் விஷயத்தை சொல்லியிருக்கிறார். கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக அனைத்து சேவைகளையும் இந்த Azamara Quest கப்பல் நிறுத்தியிருந்த நிலையில் தற்போது 4 நாள் பயணத்தை துவங்கியிருந்தது.
மொரோக்கோ நாட்டின் காசாபிளாங்கா பகுதிக்கு அருகில் சென்றுகொண்டிருந்த வேளையில் தான் பெண் தண்ணீரில் விழுந்த சம்பவம் கப்பல் நிர்வாகத்திற்கு தெரியவந்திருக்கிறது.
மீட்பு நடவடிக்கைகள்
தண்ணீரில் விழுந்ததாக சொல்லப்படும் பெண்மணி எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற விபரத்தை கப்பல் நிர்வாகம் வெளியிட மறுத்துவிட்டது. இந்நிலையில் மீட்புப் படையினரிடம் மத்திய வயதுள்ள பெண் ஒருவர் தண்ணீரில் விழுந்துவிட்டதாக தகவல் அளிக்கப்பட்ட நிலையில், இரண்டு ஹெலிகாப்டர்கள் பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
இதுகுறித்துப் பேசிய கடலோர காவல்படை அதிகாரிகள்," பார்சிலோனாவில் இருந்து கிளம்பிய கப்பல், அதிகாலை 2 மணியளவில் மஜோர்கா கடலில் 75 கிலோமீட்டர் தொலைவில் சென்றுகொண்டிருந்தபோது அதிலிருந்த பெண் ஒருவர் தண்ணீரில் விழுந்துவிட்டதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது" என்றனர்.
பெண்ணை தேடும் முயற்சியில் வீரர்கள் இறங்கியுள்ளதால் கப்பல் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், தேடும்பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது என்றனர். சொகுசு கப்பலில் சென்ற பெண், கப்பலில் இருந்து தண்ணீரில் விழுந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்நேரம் வரையில் அவர் மீட்கப்படாதது சக பயணிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
