'திடீர்னு தீப்புடிச்சு எரிந்த கோயில் மரம்...' 'மரம் தீப்பிடித்தது குறித்து கூறப்படும் காரணம்...' - அதிர்ச்சியில் பக்தர்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் கோயில் வளாகத்தில் உள்ள மரம் தீப்பற்றி எரிந்துள்ளது.

மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதியில் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான அரச மரம் ஒன்று உள்ளது. இந்த அரச மரத்தின் அடியில் சிறிய அளவில் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதை அந்த பகுதி மக்கள் வணங்கி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பழமையான அரச மரம் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக அரசமரத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
தீயணைப்புத் துறையினர் நடத்திய விசாரணையில் கோயிலுக்கு வந்த சிலர் விளக்கு ஏற்றும் பொழுது எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. கோயிலில் உள்ள அரசமரம் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதி பக்தர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
