"இத்தனை லட்சத்தை தாண்டிருச்சா?".. ‘உலகளவில்’ மான்ஸ்டராக மாறிய ‘கொரோனா!’.. உயர்ந்த உயிர்ப்பலி எண்ணிக்கை!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவின் வுஹான் நகரில் தொடங்கி உலக முழுவதுமாக பரவி, விரவிக் கிடக்கிறது கொரோனா வைரஸின் தாண்டவம்.
தெற்காசிய நாடுகள் மட்டுமல்லாதும் உலகம் முழுவதும் உள்ள 180 நாடுகளில் இந்த கொரோனாவால் உயிர்ப்பலியில் தொடங்கி, பொருளாதாரம், நிதிநிலைமை, கல்வி, வேலை வாய்ப்பு, வாழ்வியல் சூழல் உள்ளிட்ட பலவும் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை மீட்டெடுப்பதற்கே சில காலம் ஆகும் என்பதால் கொரோனா ஒரு பேரழிவுக்குக் காரணமான பேரிடராக தற்போது கருதப்படுகிறது.
சீனா, தென்கொரியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளைப் பொருத்தவரை கொரோனா முடிந்துவிட்டது, கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று எண்ணிய நிலையில் மீண்டும் பதுங்கிப் பாய்ந்துள்ளது அந்த கொடிய நோய். இது அவர்களுக்கு 2-ஆம் ரவுண்டு என்று சொல்லப்படுகிறது. இதனிடையே மற்ற நாடுகளுக்கும் இந்த 2-வது அலை பரவிவிடுமோ என்கிற அச்சமும் மேலோங்கியுள்ளது.
மொத்தத்தில், வெறும் 5 மாதங்களில், அதாவது கடந்த டிசம்பர் மாத இறுதியில், உருவான இந்த கொரோனாவால் தொடங்கிய உயிர்ப்பலிதற்போதுவரை உலகம் முழுவதிலும் 3 லட்சம் உயிர்களை பறித்துள்ளதுதான் இதில் நிறைந்துள்ள பெரும் சோகம். குறிப்பாக கொரோனாவுக்கு பலி ஆனோரின் எண்ணிக்கை அமெரிக்காவில் 85 ஆயிரத்தையும், இங்கிலாந்தில் 33 ஆயிரத்தையும் இத்தாலியில் 31 ஆயிரத்தையும் ஸ்பெயினில் 27 ஆயிரத்தையும் பிரான்சில் 27 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.