"மதுபானம்.. டோர் டெலிவரி!.. சிப்ஸ், சிக்கன் சைடு டிஷ்!".. 'குடிமகன்களின்' டேட்டா பேஸை 'அபேஸ்'!.. வைரலான போலி டாஸ்மாக் இணையதளம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 15, 2020 08:39 AM

தமிழ்நாட்டில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஆன்லைனிம் மது விற்பனை செய்யப்படுவ்தாக வெளியான போலியான மதுக்கடையின் விளம்பரம் இணையதள பக்கம் வைரலானது.

TN fake online liquor delivery website steals customer data

ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு சென்னை நீதிமன்றம் தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டதை அடுத்து, ஆன்லைனில் மது விற்பனை செய்யலாம் என்றும், வேண்டுமானால் ஆன்லைன் மூலம் வீடுகளுக்கே சென்று டோர் டெலிவரி செய்யலாம் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தநிலையில் தமிழக அரசு இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், இந்த மனு இன்று விசாரிக்கப்படுகிறது. இதனிடையே டாஸ்மாக் பெயரில் இயங்கிய போலி இணையதளம் பற்றிய விபரங்கள் வெளியானது. அதில் மதுபானம் டெலிவரி என்று குறிப்பிடப்பட்டிருந்ததோடு மது வகைகளுடன் சிப்ஸ், சிக்கன் உள்ளிட்டவையும் அதில் இடம் பெற்றிருந்தன.

ஆனால் அதனைப் பெற வேண்டுமானால், பயனாளர்களின் முகவரி உள்ளிட்ட விபரங்களும் கேட்கப்படுகின்றன. இதில் பலரும் தங்களது விபரங்களைக் கொடுத்து பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து நேற்று நள்ளிரவு முதல் இணையதளம் முடக்கப்பட்டதோடு, இந்த விளம்பரம் தாங்கள் கொடுத்ததல்ல, என்று தமிழக டாஸ்மாக் நிர்வாகத்தின் தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.