பிற்பகல் 1.04 மணிக்கு பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்! - "நீங்க எல்லாம் இருக்கும்வரை அப்பா இருப்பார்!" - எஸ்பிபி சரண்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் இன்று (செப் 25) பிற்பகல் 1.04 மணிக்கு காலமானார்.
இந்த தகவலை இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
Like I said this year just isn’t getting any better..another legend gone #ripspb sir..💔you have given us a world In which we can get lost in.. your voice your music is gonna live forever.. just like how u will live on forever in our hearts and memories..may you find ur peace pic.twitter.com/mHU8cbO97F
— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath) September 25, 2020
#RIPSPB SIR. YOU WILL BE DEEPLY MISSED SIR. WHAT A LEGEND! YOUR LEGACY WILL STAND STALL IN OUR HEARTS FOREVER.
— Prasanna (@Prasanna_actor) September 25, 2020
#RIPSPB 1:04pm
— venkat prabhu (@vp_offl) September 25, 2020
எஸ்பிபியின் மகன் சரணும் செய்தியாளர்களிடையே இதனை உறுதிப்படுத்தியதுடன், “எஸ்பிபியின் பாடல்கள் இருக்கும்வரை, நீங்க எல்லாரும் இருக்கும்வரை அப்பா இருப்பார்” என்று பேசினார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த எஸ்பிபி, நோய்த்தொற்றுக்கு ஆளாவதற்கு முன்பாக கடைசியாக இயக்கி இசையமைத்து பாடிய பாடல் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அவர் மாரடைப்பால் காலமானார் என்று மருத்துவமனை தரப்பில் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.