"அப்பாவுக்கு கொரோனா நெகடிவா?".. பாடகர் எஸ்.பி.சரண் விளக்கம்!.. ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரது உடல்நிலை குறித்து மகன் எஸ்.பி. சரண் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின், பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல்நிலை குறித்து, அவரது மகன் தினந்தோறும் தகவல் அளிப்பது வழக்கம். இந்நிலையில், சில மணி நேரங்களுக்கு முன்பு, எஸ்.பி.பி அவர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துவிட்டதாக தகவல்கள் கசிந்தன.
இது குறித்து பேசிய மகன் எஸ்.பி.சரண், "தந்தையின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை; அவருக்கு தொடர்ந்து வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது; அவருக்கு கொரோனா 'நெகடிவ்' இல்லை; அவரது உடல் நிலை குறித்து வதந்திகள் பரப்பட்டுவருகின்றன" என்று கூறியுள்ளார்.
மேலும், தான் மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்து, எஸ்.பி.பி அவர்களின் உடல் நிலை குறித்து பதிவிடுவதாக உறுதி அளித்துள்ளார்.

மற்ற செய்திகள்
