#BREAKING ‘எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை திடீர் பின்னடைவு...’ ‘மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட தகவல்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனாவில் இருந்து உடல்நிலை தேறி வந்த நிலையில் மீண்டும் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகஸ்ட் 05-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.பி.பி-க்கு எக்மோ, இதர கருவிகளுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு கொரோனா தொற்றில் இருந்து மீண்டதாகவும், பிஸியோதெரபி சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பி. உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எஸ்.பி.பி.க்கு அதிகப்படியான உயிர் காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
