எஸ்.பி.பியை ‘இப்படி’ குறிப்பிட்ட ரஜினி!.. ‘கூட்டுப் பிரார்த்தனை’ அழைப்பில் மனதை உருக வைத்த ‘வார்த்தை!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றுக்கு ஆளாகியதை அடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் குணமடைய வேண்டி இன்று மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்தபடியே நடிகர், நடிகைள் பங்கேற்கும் மவுன கூட்டு பிரார்த்தனைக்கு பல்வேறு பிரபலங்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், டைரக்டர் பாரதிராஜா உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாடும் நிலா...எழுந்து வா! கூட்டுப்பிரார்த்தனை செய்வோம். எஸ்.பி.பியை மீட்டெடுப்போம்! 20.08.2020 இன்று மாலை 6 மணிக்கு முதல் 6.05 வரை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த கூட்டுப்பிரார்த்தனையில் ரஜினி மக்கள் மன்றத்தினரும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
