"சீக்கிரம் வந்து பாடுங்க"ன்னு,,... காத்து கிடந்த மக்களை,,.. மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய நல்ல 'சேதி'!! - FACT CHECK, UPDATE
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை சற்று மோசமடைந்திருந்தது.

அவர் விரைவில் மீண்டு வர வேண்டி, சினிமா பிரபலங்கள் உட்பட இசை ரசிகர்கள் பலர் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில், தற்போது வெளியான தகவலின் படி அவருக்கு கொரோனா தொற்று நெகடிவ் என முடிவுகள் வந்துள்ளது.
மேலும், அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த தகவல் அவரது ரசிகர்கள் உட்பட சினிமா பிரபலங்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கூறிய தகவல் அனைத்து ஊடகங்களும் பகிர்ந்திருந்த நிலையில், தற்போது எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் மகன் எஸ்.பி. சரண் இந்த செய்தி தொடர்பாக அளித்துள்ள தகவலில், தனது தந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என வந்த செய்தி வதந்தி என்றும், தந்தையின் உடல்நிலை குறித்து உறுதியான தகவல் என்னிடம் இருந்து தான் வெளிவரும் எனவும் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
