'மொட்ட அடிச்சி வெள்ள சேலை உடுத்தி'...'பிரபல பெண் தலைவருக்கு எதிரா'...'சுஷ்மா' சொன்ன வார்த்தை!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Aug 07, 2019 11:57 AM
வெளிநாட்டவர் ஒருவர் இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்கக்கூடாது என, சோனியாவுக்கு எதிராக சுஷ்மா ஸ்வராஜ் தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்..
2004ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, சோனியா காந்தி பிரதமராக பதவியேற்பார் என காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தில் இருந்தார்கள். அந்த நேரத்தில் திடீர் திருப்பமாக, ஒரு வெளிநாட்டவர் இந்தியாவின் பிரதமராக பதவியேற்பது இந்தியர்களின் உணர்வை புண்படுத்துவதாக இருக்கும் என, போர்க்கொடி தூக்கினார் சுஷ்மா. அப்போது அவர் கூறிய வார்த்தைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சோனியா காந்தி பிரதமராக பதவியேற்றால் வெள்ளை உடை உடுத்தி, மொட்டை அடித்து வாழ்நாள் முழுவதும் ஒரு விதவையாகவே வாழ்வேன் என்றும் அவர் கடுமையான எச்சரிக்கை விடுத்தார். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த சுஷ்மா, பலரின் தியாகங்களுக்கு பிறகு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. அதற்குப் பிறகும் இந்தியாவை ஒரு வெளிநாட்டவர் ஆள வேண்டும் என்பது, நிச்சயமாக இந்தியர்களின் உணர்வை புண்படுத்தும் என கூறினார்.
இதையடுத்து பலத்த எதிர்ப்பு கிளம்ப மன்மோகன் சிங் இந்திய பிரதமராக பதவியேற்றார். சில வருடங்களுக்கு பிறகு, சுஷ்மா ஸ்வராஜிடம் சோனியா காந்தி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போதும் தனது கருத்தில் உறுதியாக இருந்த அவர், சோனியா காந்தி பிரதமராக ஆனால் நான் சொன்னதை இப்போதும் செய்து எதிர்ப்பு தெரிவிப்பேன் என கூறியது குறிப்பிடத்தக்கது.