வீடியோ வெளியிட்டு.. 'தல'ய வாழ்த்திய 'சின்ன தல'.. நெகிழ்ந்து போன ரசிகர்கள்.. வைரலாகும் ட்வீட்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Jul 07, 2022 04:33 PM

இந்திய கிரிக்கெட் அணி கண்ட சிறந்த கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி, இன்று தனது 41 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Suresh raina wishes ms dhoni on his birthday

Also Read | "இவ்ளோ பெரிய தார்பாய புடிச்சிட்டு மழை'ல எங்க போறாங்க??.." சாலையில் வேற லெவல் காட்டிய மக்கள்.. வைரல் காரணம்

டி 20 உலக கோப்பை, ஐம்பது ஓவர் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என தோனியின் தலைமையில் இந்திய அணி ஏராளமான கோப்பைகளை வென்று நம்பர் 1 அணியாகவும் விளங்கி இருந்தது.

எப்படிப்பட்ட நெருக்கடியான சூழல், போட்டிக்கு நடுவே உருவாகினாலும், மிகவும் கூலாக அதனை எதிர்கொண்டு வெற்றியும் காண்பதில் தோனிக்கு நிகர் யாருமே இல்லை.

அதே போல, இலக்கை நோக்கி ஆடும் போது, தோனி களத்தில் நிற்கிறார் என்றால், நிச்சயம் எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு ஒரு பதற்றம் இருக்கத் தான் செய்யும். கிரிக்கெட் உலகின் தலைச் சிறந்த பினிஷராகவும் தோனி வலம் வந்தார். சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.

Suresh raina wishes ms dhoni on his birthday

'தல'ய வாழ்த்திய 'சின்ன தல'

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது தொடர்பான பதிவு, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. தோனி - ரெய்னா ஆகியோருக்கு இடையே, கிரிக்கெட் என்பதைத் தாண்டி ஒரு சிறந்த நட்பும் விளங்கி வருகிறது. சிஎஸ்கே அணியில், இருவரும் இணைந்து ஆடி பல போட்டிகளை வென்றும் கொடுத்துள்ளனர்.

தோனியை 'தல' என அழைக்கும் ரசிகர்கள், சுரேஷ் ரெய்னாவை 'சின்ன தல' என்றும் அழைத்து வருகிறார்கள். அந்த அளவுக்கு தோனி - ரெய்னா பந்தம், பலமாக இருக்கும் நிலையில், தோனி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வினை அறிவித்த அதே நாளில், தனது ஓய்வினையும் அறிவித்து ரசிகர்களை மனம் உருக வைத்திருந்தார் சுரேஷ் ரெய்னா.

Suresh raina wishes ms dhoni on his birthday

எனது சகோதரனுக்கு..

தொடர்ந்து, தல தோனிக்காக தற்போது வெளியிட்டுள்ள ட்வீட்டில், தோனியுடன் தான் இருக்கும் புகைப்படங்களை வைத்து உருவாக்கப்பட்ட வீடியோவுடன், தனது கேப்ஷனில், "எனது சகோதரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனது வாழ்வின் எல்லா நிலையிலும், எனக்கு உறுதுணையாக இருப்பதற்கும், சிறப்பாக வழிகாட்டி வருவதற்கும் நன்றிகள். கடவுள் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க ஆசீர்வதிக்கட்டும். பிறந்தநாள் வாழ்த்துக்கள் மஹி பாய். வரும் நாட்கள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்" என நெகிழ்ந்து போய் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான பதிவு, தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

 

Also Read | மரித்த பின் சடலங்களை விற்று வந்த பெண்.. அங்க தான் ட்விஸ்ட்.. திடீரென அம்பலமான பகீர் பின்னணி

 

Tags : #MS DHONI #SURESH RAINA #SURESH RAINA WISHES MS DHONI #HAPPY BIRTHDAY MS DHONI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Suresh raina wishes ms dhoni on his birthday | Sports News.