ஆன்லைனில் வாங்கிய கிச்சன் கேபினட்.. "SHELF'அ தொறந்து பார்த்தா உள்ள ரெண்டு பார்சல்.." அதுக்குள்ள இருந்த 'அதிர்ஷ்டம்'..
முகப்பு > செய்திகள் > உலகம்ஆன்லைன் மூலம் பொருள் ஒன்றை ஆர்டர் செய்த நபருக்கு, அதனுடன் அதிர்ஷ்டம் ஒன்றும் சேர்ந்து வீட்டுக் கதவைத் தட்டியுள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த தாமஸ் ஹெல்லர் என்பவர், ஆன்லைன் மூலம் கிச்சன் கேபினட் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.
ஒரு வயது முதிர்ந்த தம்பதியினர் பயன்படுத்திய கிச்சன் அலமாரி ஒன்றை தாமஸ், eBay மூலம் ஆர்டர் செய்துள்ளார். அது மட்டுமில்லாமல், தள்ளுபடி விலையில், £253 (இந்திய மதிப்பில் 24,270 ரூபாய்) கொடுத்தும் வாங்கியுள்ளார்.
கிச்சன் கேபினட்டில் இருந்த அதிர்ஷ்டம்..
தொடர்ந்து, அந்த அலமாரியை திறந்து பார்த்த போது தான் உள்ளே இன்ப அதிர்ச்சி ஒன்று, தாமஸுக்கு காத்திருந்துள்ளது. அதனுள்ளே இரண்டு பார்சல்கள் இருந்துள்ளது. அந்த இரண்டு பார்சல்களிலும் சேர்த்து மொத்தம் £130,000 (இந்திய மதிப்பில் சுமார் 1.2 கோடி ரூபாய்) பணம் இருந்துள்ளது.
இதனையடுத்து, ஆசையுடன் அந்த பணத்தினை தன்னுடைய பாக்கெட்டில் வைத்து செலவு செய்வதற்கு பதிலாக, போலீசிடம் ஒப்படைத்துள்ளார் தாமஸ் ஹெல்லர். பழைய கிச்சன் கேபினட் ஒன்றில் இவ்வளவு பணம் இருந்ததை பார்த்து, போலீசார் வியப்பில் உறைந்து போயினர். அதே போல, தாமஸின் நேர்மை குணத்தையும் அவர்கள் பாராட்டினர்.
யாரோட பணம் இது??
இதன் பின்னர், அந்த பணம் யாருக்கு சொந்தமானது என்பதை விசாரித்து பார்த்ததில், 91 வயது மூதாட்டி ஒருவருடையது என்பதும், கணவர் இறந்த பிறகு முதியோர் இல்லம் ஒன்றில் அவர் வாழ்ந்து வருவதும் தெரிய வந்தது. மேலும், இந்த கிச்சன் அலமாரியை அவரின் பேரன் தான் விற்றுள்ளார் என்பதும், அதற்குள் இவ்வளவு பணம் இருந்தது அவருக்கு கூட தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் சட்டத்தின் படி, ஒருவரின் இழந்த பணத்தை வைத்திருப்பது மோசடியாகும் என்றும், இதற்கு சிறைத் தண்டனை வரை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், தாமஸ் பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளதால், அவரது நேர்மையை பாராட்டி, கிடைத்த பணத்தில் 3 சதவீதம், அதாவது சுமார் 3 லட்சம் ரூபாய் வரை, அவருக்கு கிடைத்துள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8