"எங்க குழந்தைக்கு சாதியும் வேண்டாம், மதமும் வேண்டாம்".. கோவை பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | May 30, 2022 02:05 PM

கோவையை சேர்ந்த ஒரு தம்பதி தங்களது மகளுக்கு சாதி மற்றும் மதம் அற்றவர் என்ற சான்றிதழை பெற்றுள்ளனர். இது பலரையும் வியப்படைய செய்துள்ளது.

Kovai Parents Got no Caste certificate for their Daughter

Also Read | 22 பயணிகளுடன் காணாமப்போன விமானம்.. பைலட்டின் போனிலிருந்து வந்த சிக்னல்..சம்பவ இடத்துக்கு போன அதிகாரிகளுக்கு காத்திருந்த ஷாக்..!

கல்வி நிலையங்களில் குழந்தைகளை சேர்க்கும்போதே, அவர்களுடைய விபரங்களில் சாதி மற்றும் மதம் ஆகியவற்றை கல்வி நிறுவனங்கள் கேட்டு பெறுகின்றன. இந்த வழக்கம் பல ஆண்டுகளாக தொடர்ந்துவரும் நிலையில், தங்களது சாதி மற்றும் மதத்தினை குறிப்பிட விரும்பாதவர்கள் அதனை புறக்கணிக்கலாம் எனவும் தமிழக அரசு முன்னரே அறிவித்திருந்தது. இந்நிலையில் கோவையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மகளுக்கு சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை பெற்றிருக்கிறார்.

Kovai Parents Got no Caste certificate for their Daughter

22 பள்ளிகள்

கோவையில் வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார் நரேஷ் கார்த்திக். இவரது மகள் வில்மா. தற்போது மூன்றரை வயதாகும் வில்மாவை பள்ளியில் சேர்க்க முடிவெடுத்த நரேஷ் பல பள்ளிகளை அணுகியுள்ளார். விண்ணப்ப படிவத்தில் மாணவியின் சாதி மற்றும் மதம் குறித்த தகவல்களை நரேஷ் பூர்த்தி செய்யாமலேயே விட்டிருக்கிறார். ஆனால், இதனை காரணம்காட்டி 22 பள்ளிகள் தனது மகளுக்கு சீட் கொடுக்கவில்லை என்கிறார் நரேஷ். இதுபற்றி அவர் பேசுகையில்,"மாணவர்களை பள்ளிகளில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தில் சாதி, மதம் குறிப்பிட தேவையில்லை என்று தமிழக அரசு கடந்த 1973-ம் ஆண்டு மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் அரசாணை பிறப்பித்து உள்ளது. ஆனாலும் பள்ளிகளில் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சாதி சான்றிதழ் கேட்கின்றனர்" என்றார்.

சாதி மற்றும் மதம் வேண்டாம்

இதனையடுத்து தனது மகள் வில்மாவிற்கு சாதி மாற்று மதம் அற்றவர் என சான்றிதழ் வழங்கக்கோரி கோவை மாவட்டம் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்கிறார் நரேஷ். இப்போது அவருக்கு சான்றிதழ் கிடைத்திருக்கிறது. தனது மகளை சாதி, மத அடையாளங்களை கடந்து வளர்க்க விரும்புவதாக கூறும் நரேஷ்," கோவை மாவட்டத்தில் முதன்முறையாக இதுபோன்ற சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. வேலைக்காக விண்ணப்பிக்கும்போது, சாதி பிரிவுகளில் NC  எனப்படும் சாதியற்றவர்களுக்கான பிரிவும் இருக்கவேண்டும். அப்போதுதான் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

Kovai Parents Got no Caste certificate for their Daughter

தனது மகளின் சாதி மற்றும் மதத்தை குறிப்பிட விரும்பாத நரேஷ், சாதி மற்றும் மதம் அற்றவர் என தனது மகளுக்கு சான்றிதழ் பெற்றிருப்பது பலரையும் வியப்படைய செய்துள்ளது.

Also Read | VIDEO: ‘இவரா இப்படி பண்ணது.. நம்பவே முடியலையே’.. அவுட்டான கோபத்தில் பட்லர் செஞ்ச காரியம்..!

Tags : #KOVAI #KOVAI PARENTS #NO CASTE CERTIFICATE #DAUGHTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kovai Parents Got no Caste certificate for their Daughter | Tamil Nadu News.