குஷ்புவின் ட்விட்டர் கணக்கை முடக்கிய மர்ம நபர்கள்!.. பின்னணி யார்?.. சைபர் கிரைம் போலிசார் கிடுக்கிப்பிடி விசாரணை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகை மற்றும் பாஜக நிர்வாகி குஷ்புவின் ட்விட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

நடிகையும், பாஜக நிர்வாகியான நடிகை குஷ்பு டிவிட்டர் வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பவர். தற்போது @khushsundar என்ற அவரது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. அவரது அனைத்து பதிவுகளும் அழிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஷ்புவை ட்விட்டர் பக்கத்தில் 13 லட்சம் பேர் பின் தொடர்ந்து வந்தனர். அவர் 710 பேரை பின் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், அவரது ஐடி @khushsundar முடக்கப்பட்டு, khushbu என்பதற்கு பதிலாக 'briann' என்கிற பெயரில் உள்ளது. அதன் பிறகு பின்னூட்டம் எதுவும் இடம்பெறவில்லை.
இதைத்தொடர்ந்து, குஷ்பூவின் டிவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசியுள்ள நடிகை குஷ்பூ, 3 நாட்களாக தனது ட்விட்டர் கணக்கை பயன்படுத்த இயலவில்லை எனவும், சைபர் கிரைம் போலீசில் புகாரளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மற்ற செய்திகள்
