'மண்வெட்டி பிடிச்ச கை இது...' 'எதுக்கும் பயப்பட மாட்டேன்...' 'விவசாயிகளுக்காக வந்த ஒரே முதல்வர் நான் தான், அதுக்கு காரணம்...' - தமிழக முதல்வர் அதிரடி பேச்சு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 23, 2021 11:40 AM

அரூர் (தனி)சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சம்பத்குமாரை ஆதரித்து மொரப்பூர் பேருந்து நிலையம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.

I am the only Chief Minister who came for the farmers eps

அப்போது அவர், ‘நான் கிராமத்தை சார்ந்தவன், விவசாயி, ஒன்றும் தெரியாது. ஆட்சியை கவிழ்த்து விடலாம் என ஸ்டாலின் எண்ணினார்.  ஆனால் அதிமுக மீண்டும் அதிக இடங்களை பெற்று ஆட்சியமைக்கொண்டவர் அவர்.

திமுக தலைவர் கொஞ்சம், நஞ்சமில்லை, ஏராளமான கஷ்டங்களை கொடுத்தார். நான் மக்களை நம்பி இருக்கிறேன். இந்த கை மண்வெட்டி பிடித்த கை, எதைக் கண்டும் பயப்படமாட்டேன்.

                  I am the only Chief Minister who came for the farmers eps

ஸ்டாலினுக்கு திறமை, உழைப்பு இல்லை. இரண்டும் இல்லையென்றால் எப்படி வரமுடியும். உழைப்பவர்கள் மட்டுமே உயர்வு பெறுவார்கள். சொந்த முயற்சி வேண்டும். யாரோ எழுதி கொடுப்பது வைத்து, இறவல் வாங்கி அரசியல் நடத்த கூடாது. எதிலும் நம்பிக்கை வேண்டும், யானைக்கு பலம் தும்பிக்கை, மனிதனுக்கு நம்பிக்கை தான் பலம் என்று பேசினார்.

                                I am the only Chief Minister who came for the farmers eps

மேலும், திமுக சாமானிய மக்களை சுரண்ட வேண்டும் என்பதற்காகவே இருக்கிறது. திமுக வரலாறை புரட்டி பார்க்கிறபோது, திமுகவில் சாதாரணமான ஒருவர் எம்எல்ஏ, அமைச்சராக முடியாது. இப்ப கூட, 20 வாரிசுகளுக்கு சீட் கொடுத்துள்ளனர்.

                                 I am the only Chief Minister who came for the farmers eps

திமுகவை பற்றி செல்போன் வைத்திருக்க மக்களுக்கு தெரியும். எங்களை விட அதிக திறமை கொண்டவர்கள் மக்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஸ்டாலின் சொன்னார், என் குடும்பத்தினர் வரமாட்டார்கள் என்று, ஆனால் இப்ப அவர் மகன் வந்துவிட்டார். மாநில, மத்திய எந்த தேர்தலாக இருந்தாலும், அவர் குடும்பத்தினர் தான் பதவிக்கு வரவேண்டும். கண்ணுக்கு தெ‌ரியாத காற்றில் கூட ஊழல் செய்தவர்கள் திமுகவினர். தமிழகத்தில் மட்டும் தான் ஊழல் செய்தார்கள் என்றால், டெல்லியிலும் ஊழல் செய்தார்கள்.

டெல்லியில் திமுகவின் பெயரை கேட்டாலே அலறுகிறார்கள். கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு தான் ஊழலே உருவானது. ஸ்டாலின் இதே இடத்திற்கு வரட்டும், நேருக்கு நேராக வரட்டும். கேள்வி கேட்கட்டும், நான் பதில் சொல்றேன், நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லட்டும். மக்களே நீதிபதியாக இருக்கட்டும்.

இந்தியாவில் தமிழகம் நீர்மேலாண்மையில் முதலிடம் பெற்று விருது வாங்கியது. இதுவரை விவசாயிகளுக்காக எந்த முதல்வரும் வரவில்லை. ஏனென்றால் விவசாயிகள் மற்றும் விவசாயத்தை பற்றி யாருக்கும் தெரியாது. நான் விவசாயி என்பதால், எனக்கு தெரிந்தது’ என்று பரப்புரையில் பேசினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. I am the only Chief Minister who came for the farmers eps | Tamil Nadu News.