தூங்கி எழுந்ததும்.. 'மெயில்' ஓப்பன் செய்து பார்த்த 'பெண்ணிற்கு'... காத்திருந்த 'இன்ப' அதிர்ச்சி!... "இது தாறுமாறான 'அதிர்ஷ்டமா' இருக்கே!!"
முகப்பு > செய்திகள் > உலகம்இரவு தூங்கி எழுந்ததும், காலையில் தனக்கு வந்த மெயில் ஒன்றைக் கண்டு, இன்ப அதிர்ச்சியிலேயே உறைந்து போயுள்ளார் பெண் ஒருவர்.

கனடாவின் மாப்ளி ரிட்ஜ் (Maple Ridge) என்னும் பகுதியைச் சேர்ந்தவர் சமந்தா லோவ் (Samantha Lowe). சில தினங்களுக்கு முன் இவர் தூங்கி எழுந்ததும், தனது இ மெயிலை செக் செய்து பார்த்துள்ளார். அப்போது, லொட்டோ மேக்ஸ் குலுக்கல் மூலம் 637,354 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் நான்கரை கோடி ரூபாய்) பணம், பரிசுத் தொகையாக சமந்தாவிற்கு கிடைத்துள்ளது.
இதுகுறித்து சமந்தா கூறுகையில், 'நான் தினமும் தூங்கி எழுந்ததும் என்னுடைய மெயிலை செக் செய்து பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். அப்படி தான் அன்று எனது இ மெயிலை திறந்து பார்த்த போது, லாட்டரி மூலம் மிகப்பெரிய பரிசுத் தொகை கிடைத்தது தெரிய வந்தது. இதனை என்னால் நம்பவே முடியவில்லை.
இவ்வளவு பெரிய பரிசுத் தொகையை நான் கண்டதும் மகிழ்ச்சியில் சத்தமாக கத்த ஆரம்பித்து விட்டேன். எனது முகம் முழுதும் புன்னகையாக நிறைந்தது. வாழ்க்கையில் இப்படி ஒரு பெரிய விஷயம் நடக்கும் போது, எப்படி ஒருவரால் சந்தோஷத்தில் சிரிக்காமல் இருக்க முடியும்?' என சமந்தா மகிழ்ச்சி பெருக்கில் கூறியுள்ளார்.
மேலும், தனக்கு கிடைத்த பெருந்தொகையில் ஒரு பங்கைக் கொண்டு, மீதமுள்ள சில கட்டணங்களை செலுத்தவுள்ளேன் என்றும் சமந்தா குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
