'கதவை தட்டிய அதிர்ஷ்டம்'... 'ஜாக்பார்ட்டாக அடித்த 30 கோடி ரூபாய்'... உற்சாகத்தில் நடிகர் ஆர்யாவின் சகோதரி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Feb 05, 2021 04:59 PM

நடிகர் ஆர்யாவின் சகோதரிக்கு ரூ. 32 கோடி ஜாக்பாட் அடித்துள்ளது.

actor arya sister thaslina wins lottery in dubai uae worth rs 32 crore

நடிகர் ஆர்யாவின் சகோதரியான, தோஹாவில் வாழ்ந்து வரும் தஸ்லீனா, கத்தார் மற்றும் இந்தியாவில் இயங்கி வரும் எம்.ஆர்.ஏ ரெஸ்டாரன்ட் அதிபர் கடாஃபியின் மனைவி ஆவார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

கோழிக்கோடு, தலச்சேரி, வடகரா உள்ளிட்ட பல இடங்களில் எம்.ஆர்.ஏ ரெஸ்டாரன்ட் இயங்கி வருகிறது. கேரளாவில் காசர்கோடு மாவட்டத்திலுள்ள திரிகரிப்பூர் என்ற பகுதியை சேர்ந்தவர்கள் ஆர்யாவும் தஸ்லீனாவும் என்பது குறிப்பிடத்தக்கது.

வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். அமீரகத்தில் விற்கப்படும் இந்த டூட்டி ஃப்ரீ லாட்டரிகள் வெகு பிரபலம்.

இந்த லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கினால் கிடைக்கும் பரிசுகளுக்கு வரி விதிக்கப்படாது. எனவே, நடைமுறை செலவுகள் போக, மீதியுள்ள தொகை அப்படியே பரிசு வெல்பவர்களுக்கு கிடைக்கும். அந்த வகையில், கடந்த ஜனவரி 26-ஆம் தேதி நடிகர் ஆர்யாவின் சகோதரி தஸ்லீனா, லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.

இதில் முதல் பரிசான 15 மில்லியன் திர்காம்ஸ் அதாவது இந்திய மதிப்பில் ரூ.32 கோடியை அவர் தற்போது பரிசாக வென்றுள்ளார். இரண்டாவது, மற்றும் மூன்றாவது பரிசும் இந்த முறை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன.

இரண்டாவது பரிசை வென்ற பிரேம் என்பவர் கடந்த 26-ஆம் தேதி வேலை இழந்துள்ளார். ஏதோ ஒரு நினைப்பில் அதே நாளில் லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார். அவர் வாங்கிய லாட்டரிக்கு கிட்டத்ட்ட ரூ. 6.69 கோடி பரிசாக விழுந்துள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Actor arya sister thaslina wins lottery in dubai uae worth rs 32 crore | Tamil Nadu News.