ஏகப்பட்ட 'ரிவார்ட்' வச்சிருக்கீங்க போல...! 'நான் சொல்ற மாதிரி பண்ணா அக்கவுண்ட்ல பணம் கிரெடிட் ஆயிடும்...' போன் பேசிட்டு இருக்கபோவே வந்த 'மெசேஜ்'... - ஆடிப்போன நபர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்36 வயதான நாகராஜன் என்னும் நபர் கரூர் மாவட்டம் வாங்கல் அருகே உள்ள அக்கரகாரம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் ஆர்.பி.எல் மற்றும் எஸ்.பி.ஐ ஆகிய இரு வங்கிகளில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 12 - ம் தேதி நாகராஜன் செல்போனுக்கு, ஆர்.பி.எல் வங்கி கிரெடிட் கார்டு தலைமை அதிகாரி என ஒரு மர்ம நபர் போன் செய்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அந்த நபர் தன்னை முருகன் என அறிமுகம் செய்து கொண்டு நாகராஜனின் கிரெடிட் கார்டில் க்ளைம் செய்யப்படாமல் அதிகளவில் ரிவார்டு புள்ளிகளை இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அதனை பணமாக மற்றும் சலுகையும் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், அதற்கு சில சில வழிமுறைகள் இருப்பதாக கூறியுள்ளார்.
நடராஜனும் பணமாக கிடைக்கும் என தன் கிரெடிட் கார்டு விவரங்களை கூறியுள்ளார், கூடவே அவரின் செல்போனுக்கு வரும் ரகசிய குறியீட்டு எண்ணையும் கூறியுள்ளார்.
போன் பேசிக்கொண்டிருக்கும் போதே, நாகராஜன் கணக்கிலிருந்து ரூ. 26,882, ரூ. 6,050 என மொத்தம் ரூ. 32,932 பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது, அதன்பின் போனும் தூண்டிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த நாகராஜன், நடந்த சம்பவம் குறித்து வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப் பதிவு செய்த போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு முன்பு நடந்த ஓ.டி.பி யாரிடமும் சொல்லக்கூடாது என அறிவுறுத்தி இருந்தாலும் மீண்டும் மீண்டும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்று கொண்டிருப்பது காவலர்கள் மட்டுமல்லாது அனைவரையும் அதிருப்தி அடைய செய்துள்ளது எனலாம்.