நடிகர் கார்த்திக்கு திடீர் மூச்சுத்திணறல்.. சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் கார்த்திக்கு ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனரும், நடிகருமான கார்த்திக் நேற்று (சனிக்கிழமை) இரவு மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். அதற்கான தேர்தல் பணிகளில் நேற்றிரவு ஈடுபட்டுக்கொண்டிந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா நெகட்டீவ் என வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் கார்த்திக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்
