'கர்ப்பமாக காத்திருந்த பெண்'... 'ஸ்கேனில் தெரியவந்த உண்மை'... 'அந்த நேரம் ஞாபகம் வந்த சின்ன வயசு சம்பவம்'... மருத்துவர்களுக்கே ஷாக்!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகில் நடக்கும் சில சம்பவங்கள் நமது கற்பனைக்கும் அப்பாற்பட்டதாகவே இருக்கிறது. அந்த வகையில் கர்ப்பமாக ஆசைப்பட்ட பெண்ணுக்குத் தான் பெண்ணே இல்லை என்பது தெரிந்தால் எப்படி இருக்கும்?
சீனாவைச் சேர்ந்த பிங்க்பிங்க் என்ற பெண் தனது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணின் கணுக்காலை மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தார்கள். அப்போது தான் அவர்களுக்கு ஒரு உண்மை புலப்பட்டது. அதாவது பிங்க்பிங்க்கு இளம் வயது முதலே எலும்புகள் சரியாக வளராமல் இருப்பது தெரிய வந்தது.
அதே நேரத்தில் அவர் கடந்த சில வருடமாகக் கருத்தரிக்க முயன்றும் அது நடக்காமல் இருந்துள்ளது. இதுவும் மருத்துவர்களுக்குச் சற்று ஆச்சரியத்தைக் கொடுத்தது. அப்போது மருத்துவர்கள் பிங்க்பிங்க் மற்றும் அவரது கணவருக்கு இடையேயான உடலுறவு குறித்த விஷயங்களைக் கேட்டார்கள். அப்போது, ஒரு பெண் பெரும் சிற்றின்பத்தை என்னால் பெற முடியவில்லை எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து பிங்க்பிங்க் மருத்துவரிடம், நானும் எனது கணவரும் பல வருடமாகக் குழந்தை பெறுவதற்கு முயற்சி செய்து வருகிறோம். ஆனால் அது முடியவில்லை. அதற்கும் இந்த எலும்பு பிரச்சனைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ எனக் கேட்டுள்ளார். இதையடுத்து பிங்க்பிங்க்யை முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்த மருத்துவர்கள் முடிவு செய்தார்கள்.
அதனடிப்படையில் அவரை ஆய்வு செய்த போது அவருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைந்து இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவர்கள் பிங்க்பிங்க்கிற்கு ஸ்கேன் செய்து பார்த்தார்கள். அப்போது தான் மருத்துவர்களுக்கே அந்த உண்மை புரிந்தது. பிங்க்பிங்க் பிறப்பால் ஒரு ஆண். இதன் காரணமாக அவருக்குக் கர்ப்பப்பை இல்லை. அதேபோன்று ஆண் உறுப்பிற்குப் பதிலாக அவருக்குப் பெண் உறுப்பு உள்ளது என்பது தெரிய வந்தது.
இதைக் கேட்டதும் பிங்க்பிங்க் அதிர்ந்து போனார். அப்போது தான், பிங்க்பிங்க்யின் தாய் அவரை சிறுவயதில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது ஞாபகம் வந்தது. அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பிங்க்பிங்க் மற்றவர்களை விட மெதுவாக வளர்வதாகக் கூறியுள்ளனர். ஆனால் அது காலப்போக்கில் சரியாகி விடும் என எண்ணியதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து மருத்துவர்கள் பிங்க்பிங்க்கிற்கு மரபணு சோதனை மேற்கொண்டார்கள். அதில், காரியோ டைப் 46, எக்ஸ். ஒய் இருப்பது தெரிய வந்தது. இது ஆண்களின் உடம்பில் இருக்கும் காரியோ டைப்களின் அளவு என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் மருத்துவர்களுக்கே பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.