திருமண வரன்களை தடுக்கும் நபர்களுக்கு எச்சரிக்கை.. போஸ்டர்-ல இளைஞர்கள் போட்ட பயங்கர கண்டிஷன்.. பரபரப்பான கன்னியாகுமரி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாகுமரியில் திருமண வரன்களை தடுத்து நிறுத்தும் நபர்களுக்கு எதிராக இளைஞர்கள் போஸ்டர் ஒட்டிய சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த போஸ்டரின் புகைப்படம் சமூக வலைத் தளங்களால் வைரலாக பரவி வருகிறது.
Also Read | கொசு கடித்ததால் மரணித்த டிரெய்னி விமானியா..? உறவினர்களை சோகத்தில் ஆழ்த்திய அதிர்ச்சி சம்பவம்.!
திருமணங்களில் எப்போதும் வரன் பார்ப்பது பல்வேறு சிக்கலான காரியமாகும். ஆனாலும், இணையம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் மேட்ரிமோனி மூலமாக எளிதில் தங்களுக்கு தேவையான வரன்களை மக்கள் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். இருப்பினும்கூட திருமணம் என்பதே பல்வேறு சிக்கல்களை உள்ளடக்கியது தான். குறிப்பாக வரன் பற்றிய விசாரணையின் போது நடக்கும் களேபரங்கள். அப்படியான சிக்கலை தான் கன்னியாகுமரி மாவட்டத்தின் கருங்கல் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் சந்தித்திருக்கிறார்கள்.
எதிர்ப்பு
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அடுத்த பாலவிளை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், உள்ளூரை சேர்ந்த சிலர் தங்களுக்கு வரும் வரன்களை தடுத்து நிறுத்துவதாக கோபமடைந்துள்ளனர். இந்நிலையில், தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக இந்த இளைஞர்கள் போஸ்டர் ஒன்றினை ஒட்டியுள்ளார்கள் அதில்,"திருமண வரன்களை தடை செய்பவர்கள் கவனத்திற்கு... தடை செய்பவர்கள் அவர்களின் மகள் அல்லது மருமகளை திருமணம் செய்து கொடுப்பதாக இருந்தால் மட்டடும் தடை செய்யட்டும். குறிப்பு- சில நபர்களின் அடையாளம் தெரியும். அடுத்த போஸ்டரில் அவர்களின் புகைப்படம் இடம்பெறும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2021-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் ஆயினிவிளை பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் ஒருபடி மேலே போய் அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தும் நபர் ஒருவரின் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்து ஒட்டி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் பாலவிளையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read | ட்விட்டர் டீலை நிரந்தரமாக கைவிட்ட எலான் மஸ்க்...ட்விட்டர் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு..!