நடுரோட்டில் சுய இன்பம் செய்த நபர்: ”அட்ரஸ் கேக்குற மாதிரி... பெண் பத்திரிகையாளர் முன்னாடி நின்னு...” - அவர் செய்தத பார்த்து அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jun 30, 2020 09:28 PM

முகவரி கேட்பதாக பேச்சுக் கொடுத்து, பெண் பத்திரிகையாளர் முன் சாலையில் சுய இன்பம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

bengaluru crime before lady journalist man masturbates on road

பெங்களூர் பனஸ்வாடி பகுதியில் 31 வயதான பெண் பத்திரிகையாளர் சனிக்கிழமை காலை 10 மணியளவில், வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்களை வாங்கிவிட்டு வீடு திரும்பும் வழியில் பைக்கில் வந்த ஒரு நபர், பெண் பத்திரிக்கையாளரிடம் நின்று முகவரி கேட்டுள்ளார். அப்போது அவர் முகவரி சொல்லிக்கொண்டிருந்த போது அந்த மர்ம நபர் தீடீரென தன் பேண்ட்டை அவிழ்த்து, அவரது மர்ம உறுப்பின் மூலம் சுயஇன்பம் செய்துள்ளார். இதை கவனிக்காத அந்த பெண் முகவரி சொல்வதிலேயே தீவிரம் காட்டியுள்ளார்.

முகவரி சொல்லிவிட்டு சட்டென்று பார்க்கும் போது அதிர்ச்சியடைந்த பெண் பத்திரிக்கையாளர் கத்தி கூச்சலிட்டு அந்த மர்ம நபரை திட்டியுள்ளார். உடனே அந்த நபர் தனது ஸ்கூட்டரில் ஏறினார். அநாகரிகமாக நடந்துக்கொண்டு அந்த மர்ம நபர் முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்ததால் அவனுடைய முகத்தைப் பார்க்க முடியவில்லை. சம்பவம் நடந்த நேரத்தில் யாரும் இல்லை என்றும் அந்தப் பெண் கூறியுள்ளார்.

இதுகுறித்து காவல்நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட நபரை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருவதாக ராமமூர்த்தி நகர் போலீசார் கூறியுள்ளனர். மேலும் மர்ம நபர் குறித்து தங்களுக்கு சில விவரங்கள் கிடைத்துள்ளதாகவும், அவரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Tags : #CRIME #ROAD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bengaluru crime before lady journalist man masturbates on road | India News.