'அப்படி இதுல என்ன இருக்குனு எல்லாரும் முண்டியடிச்சுட்டு வாங்குறாங்க!?'.. நீங்களே பாருங்க!.. 'கல்யாண முருங்கை'க்கு எகிறிய 'மவுசு'!

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்

By Manishankar | Jul 05, 2020 08:33 PM

இருமல், சளி பிரச்சினையை போக்கவல்ல, நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த கல்யாண முருங்கை இலைக்கு 'மவுசு' கூடுகிறது.

kalyana murungai demand goes high as it boosts immunity

முள் முருங்கை, முருக்க மரம், கல்யாண முருக்கன், முள்முருக்கு என்று பல பெயர்களிலும் கல்யாண முருங்கை மரங்கள் அழைக்கப்படுகின்றன. அகன்ற பச்சை நிற இலைகளையும், சிவப்பு நிற பூக்களையும் கொண்ட கல்யாண முருங்கை மரங்கள் மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரிவழங்கும் மூலிகை என்றே சொல்லலாம்.

இலை, விதை, பூ, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்ட கல்யாண முருங்கை மரங்கள் சென்னையின் புறநகர் பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன. இதுதவிர நகர்ப் பகுதிகளிலும் சில சில பகுதிகளில் கல்யாண முருங்கை மரங்கள் உள்ளன.

இந்த மர இலைகளுடன் பச்சரிசி, சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஆடாதொடா இலை போன்றவற்றையும் சேர்த்து அரைத்து வடை, அடை போன்ற உணவுகளாக செய்து சாப்பிட்டு வருகிறார்கள். மேலும் இந்த இலையுடன் முருங்கை இலை, பூண்டு, மிளகு வைத்து சூப் செய்தும் குடிக்கிறார்கள். இதனால் சளி, இருமல் பிரச்சினைகள் உடனுக்குடன் சரியாகின்றன. இதுதவிர காய்ச்சல், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் போன்றவற்றுக்கும் அருமருந்தாக கல்யாண முருங்கை இலைகள் உதவுகின்றன. மேலும் பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் இந்த இலைகள் தீர்வு கொடுக்கும் வரப்பிரசாதமாகவும் அமைகின்றன.

ஆரம்பத்தில் கல்யாண முருங்கை இலைகளை மருத்துவ குணங்களுக்காக ஆர்வத்துடன் மக்கள் பயன்படுத்தினர். ஆனால், காலப்போக்கில் இந்த இலைகள் மீதான மக்கள் பார்வை மங்கத் தொடங்கியது.

இப்போதும் கிராமப்புறங்களில் நாட்டு வைத்தியங்களில் கல்யாண முருங்கை இலைச்சாறு தவறாமல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது கொரோனா பீதி காரணமாக நோய் எதிர்ப்புச்சக்தி அதிகம் நிறைந்திருக்கும் கல்யாண முருங்கை மர இலைகளுக்கு மீண்டும் மவுசு திரும்ப தொடங்கி வைக்கிறது. இதனால் மக்கள் ஆர்வத்துடன் இந்த இலைகளை வாங்கி விருப்பப்படும் உணவுகளாக சாப்பிட்டு வருகிறார்கள். சூப்பர் மார்க்கெட்டுகளில் கூட இந்த இலைகள் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kalyana murungai demand goes high as it boosts immunity | Lifestyle News.