'தீபாவளிக்கு அடை மழை பெய்யுமா’...??? ‘வானிலை மையம் விடுக்கும் எச்சரிக்கை என்ன???’... விபரங்கள் உள்ளே...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை, இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு நோக்கி அடுத்தடுத்து வீசும் இரண்டு காற்று அலைகளால் வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று முதல் வரும் 17 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் 12 மற்றும் தீபாவளி தினமான 14 ஆம் தேதிகளில் மிக கனமழையோ, மிக மிக கனமழையோ பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழையால் ஏற்படும் சவால்களை சமாளிக்கவும், அரசு தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் அவ்வப்போது கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.