திருடுறதுல இது புதுவித டெக்னிக்கா இருக்கே...! 'மொத்தம் 100 பவுன்...' - கொஞ்சமும் டவுட் வராதபடி பிளான் பண்ணி அரங்கேற்றிய துணிகரம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை நகைப்பட்டறையில் வேலை செய்த வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் உடலில் தங்கத்தை உருக்கி திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் 17ஆம் தேதி சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் இயங்கி வரும், செயின் கிராஃப்ட் நகைப்பட்டறையில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பசூரில் ஷேக், ரீடியோ கமர்க்கர், சர்புந்த் சர்தார், சர்புந்த் மண்டல் ஆகிய 4 பேர் வேலைக்குச் சேர்ந்துள்ளனர்.
மேலும் இவர்கள் மூவரிடமும் 900 கிராம் தங்கத்தை உருக்கி, நகை செய்யும் வேலை தரப்பட்டுள்ளது. ஆனால் மூவரும் கூட்டு திட்டமிட்டு தங்கத்தை உருக்கி கம்பிபோல் மாற்றி, உடல்முழுவதும் சுற்றிக் கொண்டு, இன்று அதிகாலை தப்பியோடியுள்ளனர்.
தப்பியோடிய இளைஞர்கள் சென்ற சி.சி.டி.வி வீடியோக்களை ஆராய்ந்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags : #JEWELLERY #CHENNAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai jewelery shop youths stole gold from the body | Tamil Nadu News.