தமிழகத்தின் 'அந்த' 10 மாவட்டங்களில் கனமழை இருக்கு...! - இன்னைக்கு மட்டுமில்ல, நாளைக்கும் பெய்யும்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் (05-11-2020), நாளையும் (06-11-2020) கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை ஆகிய 10 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்றும் (05-11-2020), நாளையும் (06-11-2020) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
மேலும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
