'பெர்மிசன் இல்லாம பார்டர்ல சுத்திட்டு இருந்துருக்கு...' 'உடனே மடக்கி உள்ள போய் செக் பண்ணினப்போ...' - படகிற்குள் காத்திருந்த அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்திய கடலோர எல்லைப்பகுதியில் 30 டன் ஹெராயின், 10 துப்பாக்கிகளை கொண்டுவந்த இலங்கையை சேர்ந்த 6 பேரை கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி அருகே இந்தியா - இலங்கை கடலோர எல்லைப் பகுதியில் இந்திய கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது உரிய அறிவிப்பின்றி இந்திய எல்லையில் சுற்றி திரிந்த படகை மடக்கி சோதனை செய்தனர்.
சோதனையின் போது அந்தப் படகில் இருந்த சுமார் 30 டன் ஹெராயின், 10 துப்பாக்கிகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் படகில் வந்த 6 மர்ம நபர்களை விசாரிக்கையில் அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்கு போதை பொருட்கள் கடத்தி வந்த நிலையில் காவல்படையிடம் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. அவர்களை கைது செய்த போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
