கொல மாஸ்.. 2019 முழுசா 'ஆட்டிப்படைச்சது' இவங்க தான்..'கெத்து' காட்டிய தென்னிந்தியர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Nov 12, 2019 10:56 PM

ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் அந்த ஆண்டில் அதிகம் தேடப்பட்ட விஷயங்கள், நடிகர்-நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் குறித்து கூகுள், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் வெளியிடும். அந்த வகையில் இந்த ஆண்டின் செல்வாக்கான டாப் 5 தருணங்களை ட்விட்டர் வெளியிட்டுள்ளது. இதில் பாலிவுட்டை ஓரங்கட்டி தென்னிந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.

2019 most influential moments on twitter, details inside

அதன்படி முதல் இடத்தினை தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும், 2-வது இடத்தினை 2019 மக்களவை தேர்தல் முடிவுகளும், 3-வது இடத்தினை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியும் பிடித்துள்ளது. 4-வது இடத்தை மகேஷ் பாபுவின் மகரிஷி படமும் 5-வது இடத்தினை தீபாவளி பண்டிகையும் தட்டிச்சென்றுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாலிவுட் படங்கள் எதுவும் இந்த டாப் 5 பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தென்னிந்தியர்களின் கை ட்விட்டரில் ஓங்கியுள்ளதையும் இந்த பட்டியல் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.