'இன்னும் கொஞ்சம் நேரம் தான் இருக்கு...' 'இன்னைக்குள்ள 'ஆதார் பான் கார்டு' லிங்க் பண்ணியாகணும்...' எப்படி லிங்க் பண்ணுறது...? - வெரி சிம்பிள்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Mar 31, 2021 04:58 PM

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள் என்பதால் வருமான வரித்துறை வெப்சைட் திணறி வருகிறது.

Today last day to link the Aadhaar number with the pan card

கடந்த வருடம் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் கார்டு வைத்துள்ள அனைவரும் தங்களது ஆதார் எண் உடன் இணைக்கவேண்டும் என கூறியது. இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டே கடைசி கெடு என கூறியிருந்த நிலையில் அதன்பின் 2021ஆம் ஆண்டு மார்ச் 31 என நாட்களை அதிகப்படுத்தியது.

இருப்பினும் கடைசி நாளான இன்று பான் கார்டு மற்றும் ஆதார் எண் உடன் இணைக்கும் இன்கம் டாக்ஸ் வெப்சைட் மூச்சு விடாமுடியாமல் திணறி வருகிறது.

மத்திய அரசின் அறிவிப்பின் பான் கார்டு வைத்துள்ள அனைவரும் தங்களது ஆதார் எண் உடன் இணைக்காவிட்டால் அவர்களின் பான் கார்டு செல்லாதது எனவும், பான் கார்டு இல்லையெனில் வருமான வரி செலுத்தவும் முடியாது, செலுத்தப்பட்ட வரியை திரும்பவும் பெற முடியாது எனவும் வருமானவரித்துறை அறிவித்துள்ளது.

மார்ச் 31, 2021க்குள் ஆதார் மற்றும் பான் எண்-ஐ இணைக்காதவர்களுக்குத் தாமதம் கட்டணமாக 1000 ரூபாயை அபராதமாக விதிக்க மத்திய அரசு நிதியியல் கொள்கை 2021 அறிக்கையில் முக்கிய அறிவிப்பாக வெளியிட்டுள்ளது.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து சந்தேகம் இருப்பவர்கள் கீழ்க்காணும் நெறிமுறைகளின் படி சேர்த்துக்கொள்ளலாம்.

படி 1 :முதலில் வருமான வரித் தளத்திற்குச் செல்லுங்கள் https://www.incometaxindiaefiling.gov.in/home

படி 2 :இடது புறம் இருக்கும் Quick Links பட்டியலில் Link Aadhaar என்பதைக் கிளிக் செய்யுங்கள்

படி 3 : அங்கே கேட்கப்பட்டிருக்கும் உங்கள் பான் எண், ஆதார் எண், ஆதார் அட்டையில் இருக்கும் பெயர் ஆகியவற்றை எழுதவும்.

படி 4: உங்கள் ஆதார் அட்டையில் பிறந்த வருடம் மட்டும் இருந்தால் செக் பாக்ஸ்-ஐ டிக் செய்யவும்.

படி 5 :UIDAI அமைப்பிடம் உங்களது ஆதார் தகவல்களைச் சரிபார்க்க ஒப்புதல் அளிக்கச் செக் பாக்ஸ்-ஐ டிக் செய்யவும்.

படி 6 :Captcha Code-ஐ பதிவு செய்து Link Aadhaar என்பதைக் கிளிக் செய்யவும்.

ஆதார் - பான் இணைந்ததா சோதிப்பது எப்படி ?

படி 1. முதலில் வருமான வரித் தளத்திற்குச் செல்லுங்கள் https://www.incometaxindiaefiling.gov.in/home

படி 2. லாக்இன் செய்த பின்பு டேஷ்போர்டில் Profile Settings என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

படி 3. Profile Settings-ல் கடைசி ஆப்ஷனாக இருக்கும் Link Aadhaar என்பதைக் கிளிக் செய்யுங்கள்

படி 4. ஏற்கனவே உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டு இருந்தால் Your Pan is Linked to Aadhaar Number XXXX XXXX1234 என்ற செய்தி கிடைக்கும்.

இல்லையெனில் ஆதார் பான் இணைப்பதற்கான ஆப்ஷன் வரும்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Today last day to link the Aadhaar number with the pan card | India News.