darbar USA others

வெளி மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல .. எகிப்திலிருந்தும் இறக்குமதி... பெரிய 'வெங்காயம்' விலை குறைகிறது...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jan 13, 2020 10:33 AM

நாடு முழுவதும் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், பெரிய வெங்காயத்தின் விலை இதற்கு முன் இல்லாத  அளவிற்கு கடுமையாக உயர்ந்தது. இந்த விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

Import from Egypt and outside states . Big \'onion\' price

மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பருவம் தவறி மழை பெய்தது. அதன் காரணமாக பெரிய வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டு, அதன் விலை கடுமையாக உயர்ந்தது. தற்போது வெளிமாநிலங்களில் வெங்காய உற்பத்தி அதிகரித்து வருவதால், அதன் விலை குறைந்து வருகிறது. கோயம்பேடு சந்தையில் தற்போது வெங்காய வரத்து அதிகரித்துள்ளதால், கடந்த வாரம் ரூ.55-க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று கிலோ ரூ.45 ஆக குறைந்துள்ளது.

மற்ற காய்கறிகளான தக்காளி ரூ.20, சாம்பார் வெங்காயம் ரூ.120, கத்தரிக்காய், பாகற்காய் தலா ரூ.25, உருளைக்கிழங்கு ரூ.33, அவரைக்காய், வெண்டைக்காய் தலா ரூ.35, முள்ளங்கி, முட்டைக்கோஸ் தலா ரூ.10, பீன்ஸ் ரூ.40, கேரட் ரூ.45, பீட்ரூட் ரூ.18, புடலங்காய் பச்சை மிளகாய் ரூ.22, முருங்கைக்காய் ரூ.160 என விற்கப்பட்டு வருகிறது.

வெங்காய விலை குறைந்து வருவது தொடர்பாக கோயம்பேடு சந்தை வியாபாரிகள் கூறும் போது, ‘‘தற்போது வெளி மாநில வெங்காயம் மட்டுமல்லாது, எகிப்து வெங்காயமும் வந்துக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாக விலை குறைந்து வருகிறது. வெங்காய வரத்து அதிகரித்து வருவதால், அதன் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது’’ என்றனர்.

Tags : #ONION #MARKET