'15 வருஷம் முன்னாடி இத யோசிச்சிருக்கணும்'... 'பக்கவாதம் வந்து வீட்டு வாசலில் தவம் கிடக்கும் கணவர்'... வீட்டுக்குள் விடாமல் மனைவி சொல்லும் காரணம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Mar 23, 2021 10:32 AM

பக்கவாதத்தால் பாதித்து 15 வருடம் கழித்து வீட்டிற்கு வந்த கணவனை, மனைவி வீட்டிற்குள்'அனுமதிக்காத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man returns home after 15 years but family refused

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா காடு கொத்தனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராமு. இவரது மனைவி பிரபாவதி. இந்த தம்பதிக்கு அக்‌ஷய் என்ற மகனும், அம்ருதா என்ற மகளும் உள்ளனர். சிவராமுவுக்கு 5 ஏக்கர் நிலம், மற்றும் சொந்த வீடு இருந்துள்ளது. ஆனால் சிவராமு அதிக அளவில் கடன் வாங்கத் தொடங்கினார்.

ஒரு கட்டத்தில் வாங்கிய கடன் தனது கழுத்தை நெறிக்க வேறு வழியில்லாமல், 5 ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டுக் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு யாரிடமும் சொல்லாமல் பெங்களூருவுக்குச் சென்றுள்ளார். கணவன் திடீரென சொல்லாமல் கொள்ளாமல் போனது அவரது மனைவி பிரபாவதியை நிலைகுலையச் செய்தது. ஒன்றை ஆளாக பிரபாவதி, தனது பிள்ளைகளைக் கஷ்டப்பட்டு வளர்த்துக் கரை சேர்த்துள்ளார்.

Man returns home after 15 years but family refused

இந்த நிலையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிவராமு தனது வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் தான் அவரை அவரது குடும்பத்தினர் வீட்டுக்குள் சேர்க்கவில்லை என்று கூறினர். தன்னை குடும்பத்தினர் வீட்டில் சேர்க்க வேண்டும் என்றும், எனது உயிர் இந்த வீட்டில் தான் போக வேண்டும் என்றும் சிவராமு உருக்கமாகக் கூறி வருகிறார்.

இதற்கிடையே சிவராமுவின் மகன் அக்‌ஷய் கூறுகையில், ''15 ஆண்டுக்கு முன்பு எங்கள் தந்தை எங்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் பெங்களூரு சென்றுவிட்டார். இதனால் நாங்கள் ஆதரவற்ற நிலையிலிருந்தோம். தற்போது அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதும் இங்கே வந்துள்ளார். மனைவி, பிள்ளைகளைப் பற்றிக் கவலைப்படாமல் பெங்களூரு சென்றவர் இப்போது எதற்காக இங்கே வந்துள்ளார். அவரை எப்படி நாங்கள் ஏற்றுக்கொள்வது''? எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் கை கால்கள் செயலிழந்த நிலையில், சிவராமு காடு கொத்தனஹள்ளியில் உள்ள தனது வீட்டின் அருகில் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #KARNATAKA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man returns home after 15 years but family refused | India News.