'மக்களுக்கு 'புரியவில்லையா...' அல்லது 'வேறு' வழியில்லாமல் 'விதி மீறுகிறார்களா?...' 'அலட்சியத்தால்' ஆபத்தை நோக்கி செல்லும் 'கோவை...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Jun 19, 2020 08:26 AM

சென்னையை போல் கோவையிலும் கொரோனா வைரஸ் பரவல், அபாய கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Coronavirus Spreads Increase In Covai Like Chennai

கோவையில், 'கொரோனா' வைரஸ் பாதிப்புக்குள்ளாகி, சிகிச்சை பெற்றவர்கள் குணமானதால், அங்கு போக்குவரத்து விதிக்கப்பட்ட தடைகள் தளர்த்தப்பட்டன. இதையடுத்து, மக்களுக்கு அலட்சியம் வந்து விட்டது. நோய் தொற்று பயமின்றி, வெளியே சர்வ சாதாரணமாக உலா வர ஆரம்பித்து விட்டனர்.பொது போக்குவரத்து துவங்கியதும், சமூக இடைவெளியை பற்றியோ, முக கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டிய அவசியத்தையோ உணராமல், பலரும் பயணிக்கின்றனர்.

பேருந்துகளில், 30 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும் என, அரசு தரப்பில் அறிவுறுத்தினாலும், 50க்கும் மேற்பட்டோர் செல்கின்றனர். தனியார் பேருந்துகளில் கூட்டம், இன்னும் அதிகமாக இருக்கிறது. நகர வீதிகளில் நடமாட்டம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

சென்னையிலிருந்து கோவை வந்தவர்கள் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மூலமாக கோவையில் வேகமாக பரவி வருகிறது. விமானம், ரயில் போக்குவரத்து மட்டுமின்றி, கார் மற்றும் டூவீலர் மூலமாகவும் ஏராளமானோர், சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து, கோவைக்குள் நுழைந்துள்ளனர்.

அனைவரையும் கண்டறிந்து, சிகிச்சை அளிப்பது இயலாத காரியம். இதனால், வெளியூரில் இருந்து வந்தவர்கள், தங்களுக்கு பாதிப்பு இருக்கிறதா என அறியாமலேயே, மற்றவர்களுக்கு பரப்பி வருகின்றனர்.

சென்னைக்கு ஏற்பட்டுள்ள கதி, கோவைக்கும் வராமலிருக்க, ஒவ்வொருவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும்,  தவறினால் யாராலும் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு, கோவை நகரம் சென்று விடும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவ துறையினர்.

மேலும், சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து, 50 ஆயிரம் பேர், கோவைக்குள் நுழைந்துள்ளனர் என்றும், இனி, தொற்று பாதிப்பு அதிகரிக்கத்தான் செய்யும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சென்னையை விட, கோவை ஒரு மாதம் பின்தங்கி இருக்கிறது என சொல்லலாம், அதனால், சென்னையை போன்ற சூழல், இங்கும் உருவாக வாய்ப்புகள் ஏராளம் என அவர் குறிப்பிடுகிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Coronavirus Spreads Increase In Covai Like Chennai | World News.