சுற்றுலா சென்ற குடும்பம்... கணவனை துப்பாக்கி முனையில் மிரட்டி மனைவி பாலியல் வன்கொடுமை
முகப்பு > செய்திகள் > இந்தியாசுற்றுலா சென்ற குடும்பத்தினரை வழிமறித்து கணவரை துப்பாக்கி முனையில் மிரட்டி மனைவிக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்த கொடூரம் நடந்துள்ளது.

மத்தியபிரதேசம் மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் அதே மாவட்டத்தில் உள்ள ஒரு சுற்றுலா தளத்துக்கு தங்களது காரில் சென்றுள்ளனர். கணவன், மனைவி மட்டும் அவர்களின் இரு குழந்தைகள் உடன் சுற்றுலா தளத்தில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.
அப்போது அவர்களின் காரை இரண்டு பேர் பைக்கில் வந்து வழி மறித்துள்ளனர். திடீரென துப்பாக்கி முனையில் காரை இருவர் வழிமறித்ததால் அந்தத் தம்பதியினர் மிரண்டு போயுள்ளனர். அவர்களைக் காரை விட்டு கீழே இறங்கச் சொல்லி மிரட்டி உள்ளனர்.
கீழே இறங்கியவர்களில் கணவரை துப்பாக்கி முனையில் மிரட்டி மனைவியை காட்டுப் பகுதிக்குள் இழுத்துச் சென்றுள்ளனர் அந்த 2 மர்ம நபர்கள். குடும்பத்தை துப்பாக்கி முனையில் மிரட்டி மனைவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி உள்ளனர் அந்த மர்ம நபர்கள்.
அந்த குடும்பத்தினர் உடனடியாக அருகில் இருந்த ரஹோஹர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விரைந்து செயல்பட்ட போலீஸார் சோனு (வயது 32) மற்றும் சுமீர் சிங் (வயது 30) ஆகிய இருவரையும் கைது செய்து இன்று சிறையில் அடைத்துள்ளனர்.

மற்ற செய்திகள்
