3 பேருக்கும் ஒரே மாதிரி நெற்றியில் பொட்டு.. திரும்பி இருந்த ஃபோட்டோ.. இறந்து கிடந்த குடும்பம்.. அமான்ஷ்ய சடங்கு நடந்ததா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jan 24, 2022 02:33 PM

ஹைதராபாத்:  ஹைதராபாத்தில் கணவன் மனைவி உட்பட 7 வயது சிறுமி ஆகியோர் பூஜை பொருட்களுடன் மர்மமான முறையில் வீட்டுக்குள் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Husband, wife and child mysteriously die in Hyderabad

மர்மமான முறையில் இறப்பு:

ஹைதராபாத் அருகே அமீன்பூரில் சாப்ட்வேர் என்ஜினீயர் ஸ்ரீகாந்த் கவுட் மற்றும் ஆசிரியையான அவரது மனைவி அனாமிகா மற்றும் அவர்களது 7 வயது மகள் ஸ்னிக்தா ஆகியோர் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 20-ஆம் தேதி அந்த குடும்பம் தங்கியிருந்த வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் அக்கம்பக்கத்தினர் அளித்த புகார் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Husband, wife and child mysteriously die in Hyderabad

வீட்டின் கதவை உடைத்து சோதனை:

அனாமிகா அவர்களின் வீடு நீண்ட நேரமாக பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த வீட்டின் அருகாமையில் வசிப்பவர்கள் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். அதன்படி காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து சோதனை மேற்கொண்டதில், குடும்பத்தில் உள்ள அனைவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

Husband, wife and child mysteriously die in Hyderabad

அமானுஷ்ய சடங்கு மரணம்:

அதோடு கணவன், மனைவி மற்றும் அந்த குழந்தையின் நெற்றியிலும் குங்கும பொடியால் கோடுகள் வரையப்பட்டும், வீட்டின் தரையில் கடவுள்களின் புகைப்படங்கள் திரும்பிய நிலையில் வைக்கப்பட்டு இருந்துள்ளது. இது அமானுஷ்ய சடங்கு மரணம் என்று காவல்துறையினர் சந்தேகமடைந்து விசாரித்து வருகின்றனர். இதுக்குறித்து அக்குடியிருப்பில் இருந்த ஒருவர் 'அந்த குடும்பம் அந்தளவுக்கு மதவாதிகள் அல்ல' எனத் தெரிவித்துள்ளனர்.

Husband, wife and child mysteriously die in Hyderabad

மிகவும் பகுத்தறிவு கொண்டவர்:

மேலும், அண்டை வீட்டாரான பெண் ஒருவர் கூறும்போது , 'அனாமிகா மற்றும் அவரது கணவர் ஸ்ரீகாந்த் இருவரும் நன்றாகப் படித்தவர்கள். உண்மையில், அனாமிகாதான் எங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் என்றால் ஆலோசனை வழங்குவார். அவரது கணவர் ஸ்ரீகாந்த்தும் மிகவும் பகுத்தறிவு கொண்டவர். யாருக்கேனும் தெளிவு மற்றும் வாழ்க்கைக்கான அணுகுமுறை வேண்டும் எனில் நாங்கள் அனாமிகாவிடம் தான் ஆலோசனை பெறுவோம்' எனக் கூறியுள்ளனர்.

இந்நிலையில், குற்றம் நடந்த இடத்தில் தற்கொலைக் கடிதம் எதுவும் காவல்துறைக்கு கிடைக்கவில்லை எனவும், தடயங்கள் எதுவும் கிடைக்காததால், இந்த வழக்கில் முன்னேற்றம் காண போலீசார் தடயவியல் நிபுணர்களை  வரவழைத்துள்ளதாக காவல் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

அதோடு, குடியிருப்பில் உள்ள சிசிடிவி வீடியோ வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மர்ம இறப்பு காவல்துறையினர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 174ன் கீழ் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்ததாக தெரிவித்துள்ளனர்.

Tags : #HUSBAND #WIFE #DIE #HYDERABAD #ஹைதராபாத் #கணவன் #மனைவி #பூஜை #மரணம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Husband, wife and child mysteriously die in Hyderabad | Tamil Nadu News.