'வேட்டைக் கும்பல்' வைத்த நாட்டு 'வெடி குண்டு...' 'வாய் சிதறி' உயிருக்கு போராடும் 'பசு...' 'மனம் வெதும்பிப்' போன 'விவசாயி...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்வனவிலங்குகளை வேட்டையாட வேட்டைக் கும்பல் ஒன்று புல்லில் வைத்திருந்த நாட்டு வெடி குண்டு வெடித்ததில், பசுமாட்டின் வாய் சிதறி உயிருக்குப் போராடி வருகிறது.

வேலூர் மாவட்டம், தோலப்பள்ளி கடலைக்குலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணையா. இவர் தனது மாடுகளை வழக்கம்போல், மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றுள்ளார். மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தபோது திடீரென வெடிச்சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அங்கு சென்று பார்த்தபோது, ஒரு பசுமாட்டின் வாய் சிதைந்து, ரத்த வெள்ளத்தில் சதை தொங்கியிருந்தது. இதனால் மாடு வேதனையில் துடித்தது. இதனைக் கண்ட விவசாயி கண்ணையா மனம் வெதும்பிப் போனார்.
இதுகுறித்து உடனடியாக வேப்பங்குப்பம் காவல் நிலையத்திற்கு சென்று தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பசுமாட்டின் வாய் காயமடைந்தது தெரியவந்தது.
வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலத்தில் வனவிலங்குகளை வேட்டையாட அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டுகளை அங்கிருக்கும் வேட்டை கும்பல் பயன்படுத்துகிறது. இதனை, அப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக வரும் ஆடுகள் மற்றும் மாடுகள் உண்ண முற்படும் போது வெடி குண்டு வெடித்து அவை பலியாகின்றன.
சட்டவிரோமாக செயல்படும் இக்கும்பலைக் கண்டுபிடித்து வனத்துறை மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி கண்ணையா கோரிக்கை விடுத்துள்ளனர்.

மற்ற செய்திகள்
