'பலாப்பழத்துல விஷத்த வச்சு...' 'தித்திப்பா இருந்தனால 3 பசுக்களும் நல்லா சாப்ட்ருக்கு...' உள்ளத்தை கலங்க செய்யும் கொடூரம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாசமீபகாலமாக விலங்குகள் தொடர்ந்து விஷம் வைத்தும் வெடி பொருள்களாலும் கொல்லப்பட்டு வரும் செய்தி விலங்கு நல ஆர்வலர்களை மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த உலகமானது மனிதர்களுக்கு மட்டுமில்லாமல் இன்னபிற ஜீவராசிகளுக்கு உரியது என நினைக்காத சில மனித ஜந்துக்கள் பிற உயிரினங்களை துன்புறுத்துவது கொலை செய்வது போன்ற தீய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரள கர்ப்பிணி யானை இறந்தது முதல் தினம் ஒரு விலங்கு இறக்கும் செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது. இன்றும்(09-06-2020) கர்நாடக மாநிலத்தில் 3 பசு மாடுகள் பலா பழத்தில் விஷம் வைத்து கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பால் வியாபாரியான கிட்டே கவுடா கர்நாடக மாநிலம் சிக்மகலூர் மாவட்டத்தில் உள்ள பசரவள்ளி கிராமத்தை சேர்ந்தவர். இவர் வளர்க்கும் பசுமாடுகள் கிட்டே கவுடா பக்கத்து வீட்டாரான மஞ்சுநாத் என்பவரின் வயலில் மேய்வதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வயலில் மேய்ந்துக் கொண்டிருந்த கிட்டே கவுடாவின் 3 பசுக்கள் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்து விட்டன. பதறிப்போன கிட்டே கவுடா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்திய அல்துர் காவல் துறையினர், பலாப்பழத்தில் விஷம் கலந்து வைத்து பசு மாடுகள் கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளனர். தித்திப்பாக இருந்ததால் 3 பசுக்களும் நன்றாக சாப்பிட்டுள்ளது. மேலும் மஞ்சுநாத் என்பவர் தலைமறைவாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாகியுள்ள மஞ்சுநாத்தையும் தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
