'இதெல்லாம் எப்ப நடந்துச்சு..?'.. ஒரே நாளில் வியாபாரிகளின் செல்லப்பிள்ளையாகிய 'காண்ட்ராக்டர் நேசமணி'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 31, 2019 11:56 AM

ஃப்ரண்ட்ஸ் படத்தில் வடிவேலு நடித்த எப்பிக் கதாபாத்திரமான, நேசமணி ட்ரெண்டானதைத் தொடர்ந்து, பல வணிக நிறுவனங்கள் நேசமணியை பிராண்டுகளாகவும் மாற்றியுள்ளனர்.

Hotel and Tshirt company becomes popular after branding nesamani

ட்விட்டரில் சுத்தியலின் படம் போட்டு, இதன் பேர் என்ன என்று கேட்ட பேஜ் அட்மினை நம்மூர் குறும்புக்கார இளைஞரான விக்னேஷ் பிரபாகர், ‘அதன் பேர்தான் சுத்தியல், பாவம் காண்ட்ராக்டர் நேசமணியின் தலையில் விழுந்ததால் டங் என்று சத்தம் வந்ததை அடுத்து அவர் ஆஸ்பத்திரியில் சீரியஸாக இருக்கிறார்’ என்று கமெண்ட் பதிவிட்டார்.

உடனே நேற்று முழுவதும் இந்த மேட்டர் ட்ரெண்டானது. இதுகுறித்து வடிவேலு, ரமேஷ் கண்ணா உட்பட பலரும் தங்கள் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். தொடர்ந்து நேசமணி ட்ரெண்டிங்கால் உலகக் கோப்பை மேட்ச், மோடி பதவி ஏற்பு விழாவைக் காட்டிலும் ப்ரே ஃபார் நேசமணி என்கிற ட்ரெண்டிங் முன்னிலையில் இருந்தது.

இந்த கேப்பில், நெல்லையில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர், நேசமணிக்கு மிகவும் பிடித்த ஊத்தாப்பம் இங்கு கிடைக்கும் என்று விளம்பரம் செய்ய, இன்னொருபுறம் திருப்பூரின் வீகா பனியன் நிறுவன உரிமையாளர் விமல் மற்றும் அவரது நண்பர் நூதன் ராம் இருவரும் நூதன முறையில் யோசித்து, சுத்தியலுடன் நிற்கும் நேசமணி உருவம் பதித்த டி-ஷர்ட்களை அச்சடிக்கத் தொடங்கியதால், நடிகர் நடிகையர்களை விடவும் நேசமணி படம் போட்ட டி-ஷர்ட்களுக்கு ஆர்டர்கள் குவிந்து வருவதாக தெரிவித்துள்ளன்ர்.

Tags : #PRAYFORNESAMANI #TRENDINGNOW #VIRAL