ஜெயித்தாலும் தோத்தாலும் லதாஜி வாழ்த்து கிடைக்கும்.. எப்போதும் 2 விஐபி டிக்கெட்.. அன்று பிசிசிஐ எடுத்த முடிவு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Pandidurai T | Feb 07, 2022 06:54 PM

லதா மங்கேஷ்கரை கவுரவிக்க விரும்பிய கிரிக்கெட் வாரியம் அவருக்கு வாழ்நாள் முழுவதும் இந்தியா ஆடும் அனைத்து போட்டிகளுக்கான டிக்கெட்டை இலவசமாக வழங்கியது.

Lata Mangeshkar Music Concert for India\'s success in 1983

இந்தியாவின் இசைக்குயில் என்று போற்றப்பட்ட பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர். நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தியதையடுத்து, அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. தனது வசீகரமான குரலால், 70 ஆண்டுகள் இந்திய சினிமாவில் கோலோச்சியவர் லதா மங்கேஷ்கர். இந்நிலையில், அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பல்வேறு தரப்பினரும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

1983 இந்தியா வெற்றி

சுமார் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இந்த இசைக்குயில் ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் ரசிகர் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இசை உலகில் ஜாம்பவனாக திகழ்ந்தாலும் லதா மங்கேஷ்கருக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது தீராத காதல். தீவிர ரசிகரான இவர்; இந்திய  அணி பங்கேற்கும் போட்டிகளை பார்க்க தவறியதில்லையாம்.  கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி 1983-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் யாருமே எதிர்பார்க்காத வகையில் வெற்றி பெற்றது. வெற்றி கொண்டாட்டத்தில் நாடே ஆர்ப்பரித்து கொண்டிருக்க, பிசிசிஐ ஒரு முடிவு செய்தது.

Lata Mangeshkar Music Concert for India's success in 1983

லதாஜியின் இசை கச்சேரி

வெற்றியை பெற்று கோப்பையுடன் நாடு திரும்பும் வீரர்களுக்கு பரிசு வழங்க ஒரு இசைக்கச்சேரி நடத்த திட்டமிட்டது அப்போதைய கிரிக்கெட் வாரியம். யாரை பாட வைக்கலாம் என்பதில் பிசிசிஐ-க்கு குழப்பம். பின்பு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், லதா மங்கேஷ்கரை நேரில் சந்தித்து கேட்டனர். அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். அப்போது மோசமான சூழலில் இருந்த இந்திய கிரிக்கெட் வாரியம்டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு மைதானத்தில், ஒரு கச்சேரிக்கு ஏற்பாடு  செய்திருந்தது.

சுமார் இரண்டு மணி நேரம் நடந்த அந்த நிகழ்ச்சியின் மூலம் பிசிசிஐ-க்கு போதுமான நிதி திரட்டப்பட்டு அணியின் ஒவ்வொரு வீரருக்கும் 1 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் லதா மங்கேஷ்கர் ஒரு ரூபாய் கூட இசைக்கச்சேரிக்கு பணம் வாங்கவில்லை. இசை கச்சேரியை இந்திய அணிக்கு பரிசாக வழங்கினார்.

Lata Mangeshkar Music Concert for India's success in 1983

பிசிசிஐ நன்றி

இசைக்கச்சேரியில் நடந்த அற்புத நிகழ்வை முன்னாள் கிரிக்கெட் வீரர்  சுனில் வால்சன் கூறியதாவது, 'நாங்கள் உலகக்கோப்பை வென்று திரும்பியபோது ஐந்து அல்லது பத்தாயிரம் தருகிறோம் என்று எங்களிடம் பலரும் தெரிவித்தார்கள். அது எங்களுக்கு சரியாகபடவில்லை. அம்மாதத்தின் சம்பள தொகையை கூட்டினாலே 60,000 தான் வரும்.  லதாஜி எங்களுக்காக பாடிய அந்த மாலை பொழுதினை எங்களால் மறக்கவே முடியாது' என்று கூறினார்.  லதா மங்கேஷ்கரருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்திய மண்ணில் இந்திய அணி விளையாடும் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கும் இரண்டு வி.ஐ.பி டிக்கெட்டுகள் வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தது பிசிசிஐ.

டெஸ்ட் கிரிக்கெட்டின் ரசிகை

70, 80-களில் என்ன வேலை இருந்தாலும் கிரிக்கெட் போட்டிகளை காண மைதானகளுக்கு தொடர்ந்து வந்துவிடுவாராம் லதா மங்கேஷ்கர். 70-களில் அவரும் அவரின் சகோதரர் ஹுரதய்நாத் மங்கேஷ்கரும் மும்பை ப்ராபர்ன் மைதானத்தில் நடைபெற்ற எந்த ஒரு டெஸ்ட் போட்டிகளையும் தவறவிட்டதில்லையாம். மாநில கிரிக்கெட் சங்கங்களை போன்று லதா மங்கேஷ்கருக்கும் இரண்டு டிக்கெட்டுகள் எப்போதும் தயாராக இருக்கும் என்ற கூடுதல் கிடைத்துள்ளது. 

Lata Mangeshkar Music Concert for India's success in 1983

லதா வீட்டில் சாப்பாடு

இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் கிரிக்கெட் ஆர்வம் குறித்து திலிப் வெங்சர்க்கர் கூறுகையில்,  'லார்ட்ஸ் மைதானத்திற்கு பக்கத்தில் தான் லதாஜியின் வீடு இருந்தது. 1986-ம் ஆண்டில் நான் எனது மூன்றாவது சதத்தை அடித்தபோது அணியில் உள்ள நான்கைந்து பேரை வீட்டிற்கு அழைத்து அவரே சமைத்து விருந்தளித்தார். 1979-ம் பாகிஸ்தானை மும்பையில் நாங்கள் தோற்றபோது தனிப்பட்ட முறையில் எங்களை லதாஜி வாழ்த்தினார்" என்று கூறினார்.

Tags : #LATA MANGESHKAR #BCCI #JLN STADIUM #INDIAN CRICKET PLAYER #SINGER LATA MANGESHKAR #1983WORLD CUP #TEST CRICKET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Lata Mangeshkar Music Concert for India's success in 1983 | Sports News.