வெளிநாட்டுவாழ் தமிழச்சி பிரியாவின் பார்வையில் துபாய்... ரியல் ஸ்டோரி!

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்

By Alagulakshmi T | Feb 07, 2022 06:36 PM

வெளிநாட்டுவாழ் தமிழச்சி,

Dubai: tamil woman shared her life experience in the story

Behindwoods தோழர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் எனது வணக்கம் என் பெயர் பிரியா நான் ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates)லிருந்து என் உணர்வுகளை உங்களுடன் பகிர்கிறேன்.

எனக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. எங்களின் சொந்த ஊர் திண்டுக்கல். எனது கணவர் ஜேம்ஸ், துபாயில் Electro Mechanical Engineer- ஆக பணிபுரிகிறார். முத்தமகன் ஜோனஸ் ரெய்னா 6 வயது. இங்கு KG-2 படிக்கிறார். இளைய மகள் ஜோ மேவ்ரிக் ரெண்டு வயது குழந்தை.

எங்கள் திருமணம் நிச்சயித்த பின்பு தான், அவருக்கு துபாயில் வேலை கிடைத்தது. திருமணம் முடிந்த ஒரு வருடத்திற்கு பிறகு என்னை இங்கு அழைத்து வந்தார். அது முதல் கடந்த ஆறு வருடமாக நாங்கள் இங்கு வசித்து வருகிறோம்.

நான் சிறிது வசதி உடையவள். என் கணவர் ஏழ்மையான பின்னணி உடையவர். என் கணவரின் குணத்திற்காக நான் அவரை திருமணம் செய்து கொண்டேன். திருமணத்திற்கு பின்புதான் அவர் " B.Tech, Bits Pilani University - ல்  Distance Learning- ல் படித்தார். International Driving Licence எடுத்தார்.

மேலும், நாங்கள் என் கணவரின் தம்பி, தங்கையை படிக்க வைத்து, வேலையில் அமர்த்தி, அவரது தலையின் திருமணம் நடத்தி, அவரது பூர்வீக வீட்டையும் கட்டிவிட்டோம். இது அனைத்தும் இந்த எட்டு வருடத்தில் சாத்தியமானதற்கு இந்த வெளிநாட்டு வேலை தான் காரணம்.

சொல்வார்கள், நம் நாட்டில் படித்து இங்குதான் வேலை பார்க்க வேண்டும் என்று, உண்மைதான் மறுக்கவில்லை. ஆனால், கடமையும், கட்டாயமும் இருப்பதால் தான், வெளிநாட்டை தேடி ஓட வேண்டியுள்ளது.

இங்கு இரண்டு விதமான மக்கள் வசிக்கின்றனர். ஒன்று பணம் படைத்தவர்கள், இவர்கள் வசதி இருந்தும் இங்கு வந்து சம்பாதித்து அதை அனுபவிக்கின்றனர். மற்றொருவர் பணம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள். இதில், நாங்கள் உட்பட பலரும் அடங்குவார்கள். நாங்கள் விரும்பி எங்கள் பெற்றோர், உடன் பிறந்தோர், நண்பர்கள், உறவினர்கள், ஊர், நாட்டையும் விட்டு வரவில்லை.  நம் தலைமுறையாவது முன்னேற்று விட வேண்டும் என்ற முனைப்பில் வந்தவர்கள்.

மகிழ்ச்சியான தருணங்கள்

அமீரகத்தில் இந்தியர்கள் போன்று பல நாட்டு மக்களும் ஒன்றாக கலந்து வாழ்கின்றனர் பொது இடத்தில் "நீங்கள் இந்தியரா?" என்று கேட்பதிலும், "நீங்கள் தமிழா?" என்று கேட்பதிலும் அவ்வளவு மகிழ்ச்சி. நம் வீட்டு அருகில் பிலிப்பினியர்கள், பாகிஸ்தானியர்கள், ஆப்பிரிக்கர்கள் வசிக்கின்றனர். அனைவரும் நன்றாக பேசி பழகுவார்கள். இங்கு நாங்கள் நடத்திக்கொள்ளும் ஒரே சுபகாரியம் குழந்தைகளின் பிறந்தநாள். நண்பர்கள் அனைவரையும் அழைத்து ஒரு சந்திப்பு ஏற்படுத்தி மகிழ்வோம்.

குடும்பத்தை பிரிந்த வலிகள்

வருடத்திற்கு ஒருமுறை வரும் எங்களின் வரவுக்காக காத்திருந்து எங்கள் குடும்பம், சொந்தம், நண்பர்கள் விசேஷங்களை வைப்பார்கள்  சில நேரங்களில் நாங்கள் இல்லாமல் நடக்கும் சுபகாரியங்களில் எங்கள் பங்கு உள்ளது என்று எண்ணி மனநிறைவு அடைவோம். எங்களின் பெரிய ஆறுதல் "Video Call". யார் எதற்கு பயன்படுத்தினாலும், இதன் முழு நன்மையையும் எங்களைப்போல உணர்வுபூர்வமாக யாராலும் அனுபவிக்க முடியாது. குடும்பமாக இருந்தாலும் கூட பரவாயில்லை, ஆனால், புதிதாக திருமணமாகி மனைவியை பிரிந்து வருவது, பிறந்த குழந்தையை பார்க்க முடியாமல் தவிப்பது, திருமண வயது தாண்டியும் தன் கடமையை முடிப்பதற்காக உழைப்பவர்கள் போன்ற பலர் இங்கு வாழ்கின்றனர்.

வாழ்வில் நடந்த ஆச்சரியமான விஷயங்கள்

பொதுவாக, நம் ஊரில் இருப்பவர்கள் தான் உழைக்கும் ஊதியத்தை மிச்சப்படுத்த கணக்கிட்டு குடும்பத்தை நடத்துவார்கள். ஆனால், இங்கு குடும்பமாக வசிக்கும் எங்களுக்கு 2 வழி உள்ளது. ஒன்று கணவருடன் இருந்து குறைந்த பணம் மிச்சப்படுத்துவது, மற்றொன்று கணவரை பிரிந்து அதிக பணம் சேமிப்பது.

பலர் நினைப்பார்கள்  பணம் சம்பாதிக்க தானே நீங்கள் வெளிநாடு சென்றீர்கள் என்று, அதீத தேவையும், கட்டாயமும் உள்ளவர்களாலும், குறைந்த ஊதியம் உடையவர்கள் கண்டிப்பாக குடும்பத்தை இங்கு அழைத்து வர முடியாது. ஆனால், கடமையை ஓரளவிற்கு முடித்தவர்கள், தன் எதிர்காலத்திற்கு பணம் தேவையா? இல்லை வாழ்க்கை வேண்டுமா ? என்று நினைக்கும்போது, பலர் வாழ்க்கைதான் தேவை என முடிவெடுக்கும் பட்சத்தில், இங்கு என்னை போன்ற நடுத்தர மக்களும் குடும்பமாக வசிக்க முடிகின்றது.

இங்கு குடும்பமாக வசிக்கும் கணவன், மனைவி இடையே புரிதல் சற்று அதிகமாக இருக்கும். எல்லா, ஏற்றத்தாழ்வுகளையும் தாங்களே சமாளித்துக் கொள்ளும் திறன் படைத்தவர்கள். கொரானா சூழலில் கணவன் வேலை இழந்த நேரத்திலும் குடும்பத்தை சமாளித்த மனைவி, தன் முதல் குழந்தையை பார்த்துக் கொண்டே தன் மனைவியின் இரண்டாம் பிரசவத்தை தனியே சமாளித்த கணவர் என பலரையும் நான் இங்கு பார்த்திருக்கிறேன்.

அதேபோல், இங்கு வேலை பார்த்து, மனைவி நாட்டில் இருந்தாலும் இதே புரிதல் தான். தன் மனைவி குழந்தைகளுக்காக அனைத்தையும் இழந்து வேலை பார்க்கும் கணவர், தன் கணவருக்காக குழந்தையுடன் அனைத்து சூழ்நிலைகளையும் தனியே சமாளிக்கும் திறன் கொண்ட மனைவி.

வெளிநாடு என்பது ஒரு கனவு வாழ்க்கை. நம் நாடு என்பது தான் உண்மை இதை புரிந்து கொண்டவர்கள் முன்னேற்றம் பெறுவர், புரியாதவர்கள் பணம் சம்பாதித்து அதை இங்கேயே அழித்து விடுவர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தனித்துவம்

அமீரகம் என்பது ஒரு முஸ்லீம் நாடு. ஆனால், இங்கே கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இந்துக்களின் கோவில்களும் அதிகம் உள்ளது. அனைத்து மதத்தினரையும் அவர்களின் வழிபாடு, சடங்குளையும் மதிக்கும் நாடு இது. ஒழுக்கம், நெறி, தூய்மை, உதவும் மனப்பான்மை போன்ற பல நற்குணங்கள் நிறைந்த நாடு. முக்கியமான அனைத்து இடத்திலும் வரிசை முறைப்படி (queue system) மக்கள் நடந்து கொள்வர்.

வெவ்வேறு நாட்டினராக இருந்தாலும், அமீரகத்தில் வாழும் அனைவருமே ஒரே நாட்டவர் என்ற எண்ணம் உண்டு. அமீரகம் எல்லா வசதிகளும் உடைய, ஒரு அருமையான சுற்றுலா தளம். மேலும், இவர்கள் எந்த ஒரு தனிநபரின் நேரமும், அரசாங்கத்தால் தாமதப்படக்கூடாது என்ற எண்ணம் உடையவர்கள். எனவே, எல்லா அலுவலகங்களும் Digital முறைப்படி இயங்குவதால் மக்களின் தேவைகள் Online மூலம் பூர்த்தி அடைகின்றது. அரசு அலுவலகம் சென்றாலும் ஐந்து நிமிடத்திற்குள் ஒருவர் தன் வேலையை முடித்து விடலாம்.

முடிவாக

"இந்தியா எனக்கு உயிர் கொடுத்து எனக்கு அறிவழித்த நாடு. அமீரகம் எனக்கு வாழ்வளித்த நாடு". "என் இந்திய தாய் மண்ணிற்கும், அமீரக நாட்டிற்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்". இந்தப் பதிவை குடும்பத்தை பிரிந்து வாழும் வெளிநாட்டில் பணிபுரிபவர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் கப்பலில் பணிபுரிபவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன்.

எனது எண்ணங்களை பகிர்வதற்கு ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்த நம் உணர்வுகளின் தோழனான Behindwoods - க்கு, எனது பணிவான நன்றிகளும், வணக்கங்களும்.

நன்றி.

இப்படிக்கு

உங்கள் அன்பு தோழி,

பிரியா

இடம்: ஐக்கிய அரபு அமீரகம் ( United Arab Emirates)

Tags : #DUBAI #LIFESTORY #SURVIVE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dubai: tamil woman shared her life experience in the story | Lifestyle News.