'17ம் தேதி கல்யாணம்'... 'காதலி கையால் மீன் குழம்பு'... 'கையில் இருந்த ஈரம் காய்வதற்குள் நடந்த துயரம்'... அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்17-ந்தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் இளம் தம்பதியின் மொத்த கனவும் கலைந்து போயுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்த். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவரும் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் அரியலூர் மாவட்டம் மீன் சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் இருவரது காதல் குறித்து இரு வீட்டாருக்கும் தெரிய வந்த நிலையில் அவர்களின் காதலுக்குப் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து வரும் 17ம் தேதி திருமணம் செய்யலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் கொரோனா 2-வது அலை காரணமாக நிஷாந்த் வேலை பார்த்த அலுவலகத்திற்கு விடுமுறை விடப்பட்டது.
இதனால் சென்னையிலிருந்து திருமணம் நிச்சயிக்கப்பட்ட அந்த பெண் வீட்டிற்கு நிஷாந்த் வந்துள்ளார். வீட்டிற்கு வந்த வருங்கால மாப்பிள்ளைக்குத் தடபுடலாக விருந்து பரிமாறப்பட்டது. அதில் மீன் குழம்பு பரிமாறப்பட்ட நிலையில் நிஷாந்த் திருப்தியாகச் சாப்பிட்டுள்ளார். பின்னர் சாப்பிட்டுவிட்டு வந்து நிஷாந்த் அமர்ந்த நிலையில் திடீரென வாந்தி எடுக்க ஆரம்பித்துள்ளார்.
இதனால் பதறிப் போன காதலி நிஷாந்தின் காதலி மற்றும் அவரது பெற்றோர் உடனடியாக அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்குப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே நிஷாந்த் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
ஆசை ஆசையாக வீட்டிற்கு வந்த காதலன் தனது கண்முன்பே இறந்த சம்பவம் நிஷாந்தின் காதலியை நிலைகுலையச் செய்துள்ளது. இதற்கிடையே இச்சம்பவம் குறித்து நிஷாந்தின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து நிஷாந்தின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
