வாழ்வா சாவா போராட்டம்!.. இந்த முறை நிரூபித்தே ஆக வேண்டும்!.. ஆனா எல்லாமே கைய மீறி போயிடுச்சு!.. வேதனையில் சாஹா!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு10 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்றும் கொரோனாவில் இருந்து விருதிமான் சாஹா குணமடையாததால் முக்கிய வாய்ப்பை இழக்க வாய்ப்புள்ளது.
ஐபிஎல் தொடரில் வீரர்களிடையே கொரோனா தொற்று அதிகம் பரவியதால் அது பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா பாதித்த வீரர்களில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை சேர்ந்த விரிதிமான் சாஹாவும் ஒருவர்.
கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்ட இவருக்கு முதல் 2 பரிசோதனைகளின் போதும் நெகட்டீவ் என வந்த நிலையில் 3வது டெஸ்டில் தொற்று உறுதியானது.
கடந்த மே 3ம் தேதி முதல் தீவிர சிகிச்சை பெற்று வரும் சாஹா, தற்போது உடல் வலி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் எதுவும் இன்றி நலமாக உள்ளார். எனினும், பரிசோதனை முடிவுகள் அவருக்கு சாதகமாக வரவில்லை. கிட்டத்தட்ட 2 வாரங்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள போதும் சாஹாவுக்கு கொரோனா பாசிட்டீவ் என முடிவு வந்துள்ளது. இதனால் அவரை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் மறுத்துவிட்டனர்.
இந்தியா - நியூசிலாந்து மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் விருதிமான் சாஹாவும் இடம்பிடித்துள்ளார். எனினும், அவர் உடற்தகுதியை நிரூபித்தால் மட்டுமே சக வீரர்களுடன் இங்கிலாந்து பயணிக்க முடியும்.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய வீரர்கள் மே19ம் தேதிக்குள் மும்பை சென்று அங்கு பிசிசிஐயின் பபுளுக்குள் நுழைய வேண்டும். அங்கு அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து புறப்பட உள்ளனர். எனவே, அதற்குள்ளாக கொரோனாவில் இருந்து குணமடைய வேண்டிய கட்டாயத்தில் விருதிமான் சாஹா உள்ளார்.
விருதிமான் சாஹா இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு சென்றாலும் அங்கு அவருக்கு ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே. ஏனெனில், பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என ரிஷப் பண்ட் ஃபுல் ஃபார்மில் உள்ளார். இதனால் வாய்ப்புகாக காத்திருக்கும் விருதிமான் சாஹா, ஒரு போட்டியில் இடம் கிடைத்தாலும் அதனை சாதூர்யமாக பயன்படுத்தி தனக்கான இடத்தை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
அப்படி ஒரு வேளை சாஹா நிரூபிக்கத் தவறினால், இந்திய அணியில் அவரது எதிர்காலம் கேள்விக்குறி தான்.