'அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்'... 'இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள்'... அசத்திய ஹெட் மாஸ்டர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. இந்த சூழ்நிலையில் இன்று முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 10 வகுப்புவரை அரசுப் பள்ளியில் சேர்க்கை நடைபெறும் எனப் பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. இதையடுத்து பல அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள படிக்காசு வைத்தான் பட்டியில் ஊராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 50க்கும் மேற்பட்டோர் படிக்கும் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக ஜெயக்குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இன்று மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில், புதிய மாணவர்களின் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் விதமாக, புதிதாகப் பள்ளியில் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேருக்கு சுமார் 10 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசியினை வழங்கி வரவேற்றார்.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்வதை ஊக்குவிக்கும் விதமாகத் தனது சொந்த செலவில் தலைமை ஆசிரியர், 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் வழங்கியுள்ளது அந்த பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் தலைமை ஆசிரியரின் செயலுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்
