VIDEO: '40 வருஷ உழைப்பு நிறைவேறிருக்கு...' 'அடுத்து இன்னும் கொஞ்சம் சேர்த்து வாங்கிடலாம்...' 'கண்ணீர் விட்டு அழுத அன்புமணி...' - வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்40 வருட உழைப்பிற்கு பிறகு வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கப்பட்டதாக ஆனந்த கண்ணீர் விடும் அன்புமணி அவர்களின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீடு 3 ஆக பிரித்து உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட தொகுப்பில் உள்ள வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடும், சீர்மரபினருக்கு 7 சதவீதம் உள் ஒதுக்கீடும், எஞ்சிய பிரிவினருக்கு 2.5% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் வரும் 6 மாதங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கும் போது, இட ஒதுக்கீடு மாற்றி அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி இருந்தார்.
இந்த அறிவிப்பு குறித்து வெளிவந்த பின், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, தனது தந்தை ராமதாஸிடம் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது.
அதில், கண்ணீர் வழிந்த நிலையில் அன்புமணி, '40 வருச உழைப்பு நிறைவேறிருக்கு.. இன்னும் கேட்டு வாங்குவோம்... இது சாதரண வெற்றி இல்லை' என கூறியுள்ளார். அவர் பேசும் இந்த வீடியோ தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
