பாஜக எம்.பி மீது ‘ஷூ’வை வீசிய நபர்.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 18, 2019 03:20 PM

மக்களவை தேர்தல் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் பாஜக எம்.பி., மீது ஷூவை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Man hurls shoe at BJP leaders during press conference

பாஜக தேசிய செய்தி தொடர்பாளாரான ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி நரசிம்ம ராவ் இன்று டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது கீழே பத்திரிக்கையாளர்களுடன் அமர்ந்திருந்த நபர் திடீரென ஷூவைக் களற்றி பாஜக எம்.பி நரசிம்ம ராவ் மீது வீசினார். இதனால் அந்த இடந்த்தில் பெரும் பரபரப்பு நிலவியது. உடனே அந்த நபரை அங்கிருந்தவர்கள் வெளியே அழைத்து சென்றனர்.

பாஜக எம்.பி மீது ஷூவை எறிந்தவர் யார்? எதற்காக அப்படி செய்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : #LOKSABHAELECTIONS2019 #BJP #ELECTIONS2019