'மணப்பெண் இன்றி ஆடம்பரமாக நடைபெற்ற திருமணம்'... 'நெகிழ வைத்த தந்தை'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | May 13, 2019 03:09 PM

அனைத்து சடங்குகளும் முறைப்படி மேற்கொள்ளப்பட்டு, மணப்பெண் இன்றி நெகிழ்ச்சியான காரணத்துடன் இளைஞர் ஒருவருக்கு, ஆடம்பரமாக நடத்தப்பட்ட திருமணம் தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

this Gujarat man had a lavish wedding, sans bride

குஜராத் மாநிலம் சபர்காந்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜய் பரோட். 27 வயதான இவருக்கு ஒரே ஒரு ஆசைதான். அது ஆடம்பரமாக திருமணம் நடக்கவேண்டும் என்பதுதான். இது குறித்து அஜய் பரோட்டின் தந்தை கூறுகையில், 'சிறுவயது முதல் எனது மகனுக்கு கற்றல் குறைபாடு உள்ளது. அதனுடனேயே வளர்ந்த அவன், தனது உறவினர்களின் திருமண நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சியாக காணப்படுவான். மற்றவர்களின் திருமணத்தை மகிழ்ச்சியாக கொண்டாடிய அவன், ஒரு நாள் எனக்கு எப்போது இப்படி திருமணம் செய்து வைப்பீர்கள் எனக் கேட்டான்.

இதனையடுத்து அவனது ஆசையை நிறைவேற்ற அவனுக்கு சில இடங்களில் பெண் தேடியும், எதுவும் ஒத்துவராததால் மணப்பெண் இல்லாமலே திருமணம் செய்ய முடிவு எடுத்தோம். இது அவனின் மகிழ்ச்சிக்காக நடைபெறும் திருமணம். எனவே இது குறித்து உறவினர்களுடன் கலந்து பேசி முடிவு எடுத்தோம். அதன்பின்னர், அனைத்து குஜராத்தி சடங்குகளையும் முறையாக செய்வது எனவும், மணமகள் மட்டும் இல்லாமல் இந்த திருமணத்தை நடத்துவது எனவும் முடிவெடுத்தோம்.

அதன்படி சங்கீத், மெகந்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் ஆட்டம், பாட்டம் என 200 உறவினர்கள் கலந்துகொண்ட இந்த திருமணம் தற்போது நடந்து முடிந்துள்ளது. என் மகன் மிகவும் மகிழ்ச்சியாக உணருகிறான். சிறு வயதிலேயே தனது தாயை இழந்த எனது மகனின் இந்த கனவை நான் நிறைவேற்றியுள்ளேன். இது எனக்கு மிகப்பெரிய மன நிம்மதியை தருகிறது' என தெரிவித்தார்.

Tags : #GRANDWEDDING #GUJARAT