இவரு யாரு தெரியுதா...? 'ஒரு காலத்துல பரபரப்பா இருந்த மனுஷன்...' - நான் பஸ்ல வந்த விஷயத்தை கேள்விப்பட்டு ஜெயலலிதா என்ன பண்ணினாங்க தெரியுமா...?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jul 14, 2021 07:16 PM

சாத்தான்குளம் முன்னாள் அதிமுக எம்எல்ஏ பழையப்படி  ஆடு, மாடுகள் மேய்க்கும் தொழிலை செய்து வருவதாக கூறியுள்ளார்.

Former AIADMK MLA from Sathankulam was for herding sheep

சாத்தான்குளம் முன்னாள் அதிமுக எம்எல்ஏ நீலமேகவர்ணம். இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு அப்பகுதியில் வெற்றி பெற்றார்.

அந்த இடைத்தேர்தல் வெற்றிக்கு பின் நீலமேகவர்ணம் அவர்களுக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டும்  கிடைக்கவில்லை. அதன் பின் கட்சி பணியை மட்டும் கவனித்த நீலமேகவர்ணம், தற்போது பிழைப்பிற்காக முன்பு பார்த்து வந்த ஆடு, மாடுகள் மேய்க்கும் தொழிலை செய்து வருகிறார்.

இதுகுறித்து நீலமேகவர்ணம் அளித்த பேட்டியில், 'நான் எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுக உண்மை தொண்டனாக பணியாற்றி வருகிறேன். இடைத்தேர்தல் வந்த சமயத்தில் கட்சி விளம்பரத்திற்காக சுவரில் வெள்ளை அடித்துக் கொண்டிருந்த போது, அதிமுக வேட்பாளராக என்னை ஜெயலலிதா அறிவித்த தகவல் வெளியானது.

அது எனக்கு பெரும் அதிர்ச்சியையும், உத்வேகத்தையும் தந்தது. என்னுடைய இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதாவே தேர்தல் பிரசாரம் செய்தார்.

அந்த தேர்தலில் வெற்றிபெறவும் செய்தேன். தேர்தல் முடிந்து முதன்முதலில் சட்டமன்றம் சென்ற போது பேருந்தில் சென்றதை அறிந்து ஜெயலலிதாவே எனக்கு கார் வாங்கித் தந்தார்.

அந்த தேர்தலுக்கு பின் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. கட்சி பணிகளை கவனித்து வந்தாலும், என்னுடைய குடும்பச்சூழல் காரணமாக தற்போது நான் முன்பு பார்த்து வந்த ஆடு, மாடு மேய்க்கும் தொழிலை செய்து வருகிறேன். அதோடு பனை, புளியமரம், முருங்கை  வளர்த்து  பராமரித்து வருகிறேன். இது எனக்கு மிகுந்த மனநிறைவை தருகிறது' எனக் கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Former AIADMK MLA from Sathankulam was for herding sheep | Tamil Nadu News.