“234 தொகுதியும் சைலண்ட்டா இருக்கணும்.. 2021ல”... “மாஸ்டர்” விஜய் ரசிகரின் “பரபரப்பு” போஸ்டர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிகில் திரைப்படத்துக்கு பிறகு விஜய், லோகேஷ் கனகராஜ் இணையும் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் கடந்த 15-ஆம் தேதி வெளியானது.

ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த போஸ்டர் கொண்டாட்டங்களை அடுத்து, தமிழ்ப்புத்தாண்டை ஒட்டி ஏப்ரல் மாதத்தில் படத்தை திரைக்கு கொண்டு வரலாம் என்பது படக்குழுவின் யோசனை.
விஜய் மட்டுமே இடம் பெற்றுள்ள இந்த போஸ்டரில், வாயில் விரல் வைத்து அமைதியாக இருங்கள் என்று விஜய் கூறுவது போல இருக்கும் விஜயின் போஸ் பலரையும் கவர்ந்துள்ளது. எனினும் அந்த போட்டோவை வைத்து விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் ஒன்று வைரலாகியுள்ளது.
அதில், ‘234 தொகுதியும் சைலண்டா இருக்கணும். 2021-ல் நாங்க தான் இருக்கணும். மக்கள் பணி செய்ய வரும் மாஸ்டர் மாண்புமிகு தளபதி’ என்று எழுதப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags : #VIJAY #MASTER
