தஞ்சை தேர் விபத்தில் 200 பேர் உயிரை காப்பாற்றிய மின்வாரிய ஊழியர்.. வெளியான உருக்கமான தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தஞ்சை தேர் விபத்தில் மின்வாரிய ஊழியரின் துரித நடவடிக்கையால் 200-க்கும் மேற்பட்டோரின் உயிர் காப்பாற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் 94-வது ஆண்டு அப்பர் குருபூஜை விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றுள்ளது. களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக தேர் கொண்டுவரப்பட்டது. அதிகாலை 3 மணியளவில் களிமேடு பகுதியில் உள்ள பூதலூர் சாலையில் தேர் வந்தபோது உயர்மின் அழுத்த கம்பி உரசியதில் தேர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில் மின்வாரிய ஊழியரின் துரித நடவடிக்கையால் பலரது உயிர் காப்பாற்ற சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. களிமேட்டு கிராமத்தை சேர்ந்தவர் திருஞானம் (வயது 36). இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தேர் விபத்து நடந்த சமயத்தில் வீட்டில் இருந்தார். அப்போது பொதுமக்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தவர், தரையில் இருந்த தண்ணீரில் மின்சாரம் பரவியதை உணர்ந்து கொண்டார்.
உடனடியாக அவர் காயத்தையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களை காப்பாற்ற முடிவு செய்து உள்ளே சென்றார். இதனிடையே தஞ்சையில் உள்ள உயர் மின்வாரிய அதிகாரிகளுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். மேலும் சக ஊழியர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து உயர் அதிகாரிகள் தஞ்சையில் இருந்தவாறே களிமேட்டுக்கு செல்லும் உயர்அழுத்த மின்பாதை இணைப்பு வோல்டேஜை துண்டித்தனர். இதனால் மேலும் மின்சாரம் பரவுவது தடுக்கப்பட்டது. இதன்மூலம் 200-க்கும் மேற்பட்ட உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த திருஞானம், தற்போது தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
