அன்பு மனைவியை ஃபோட்டோ எடுக்க கணவர் எடுத்த முயற்சி.. மனதை கொள்ளை கொண்ட வீடியோ!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Mar 06, 2023 10:12 AM

இணையத்தில் நம்மைச் சுற்றி வைரலாகும் செய்திகளுக்கு எல்லையே கிடையாது. நம்மைச் சுற்றி இந்த உலகில் அத்தனை சம்பவங்கள் நடைபெறுவதால் வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் நிச்சயம் இணையத்தில் வைரல் ஆகி பலர் கவனமும் பெறுகிறது.

Elderly man trying to take his wife prefect picture netizens reacts

                         Images are subject to © copyright to their respective owners.

Also Read | "படம் ரிலீஸ் ஆகுறப்போ MGR Review கேக்குறது MK ஸ்டாலின் கிட்டயா?.. முதல் நாளிலேயே கோபாலபுரத்திற்கு பறக்கும் போன்!!.. முதல்வர் ஷேரிங்ஸ்!!

அது மட்டுமில்லாமல், இயல்பாக நடைபெறும் விஷயங்களில் இருந்து சற்று மாறுபட்டு வினோதமாக, அல்லது கலகலப்பாக, அதிர்ச்சி கலந்தோ, மனம் நெகிழ வைக்கும் வகையில் என வித விதமாக இருக்கும் போது அவை இணையவாசிகள் மத்தியில் பேசு பொருளாக மாறும்.

அதிலும் குறிப்பாக, காதலும் அன்பும் கலந்து வைரலாகும் சில வீடியோக்களை பார்க்கும் மக்களும் பிரத்யேகமாக உள்ளனர்.

Elderly man trying to take his wife prefect picture netizens reacts

Images are subject to © copyright to their respective owners.

வயது கடந்தும் காதல்..

அதிலும் வயது என்ற விஷயத்தைத் தாண்டி ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துவது தொடர்பாக ஏராளமான வீடியோக்களையும், செய்திகளையும் நாம் சமூக வலைத்தளங்களில் கடந்து வந்திருப்போம். திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்து கொண்டு வரும் தம்பதிகள், வயது கடந்தும், ஆண்டுகள் கடந்தும் பால்ய காலத்தில் எப்படி அன்பாக இருந்தார்களோ அதே போல ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டி செய்யும் விஷயங்கள் இளம் தம்பதிகளை கூட மனம் உருக வைக்கும். அத்துடன் பல ஜோடிகளுக்கு ஒரு சிறந்த பாடமாகவும் அவை இருக்கும்.

Elderly man trying to take his wife prefect picture netizens reacts

Images are subject to © copyright to their respective owners.

அந்த வகையில் நம்மை மெய்சிலிர்க்க செய்யும் வீடியோவில் ஒரு தம்பதியரின் அன்பு குறித்த வீடியோ தான் இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.

மனைவிய அழகா ஃபோட்டோ எடுக்கணும்

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் பகுதியில் ஆதியோகி சிவா சிலை அமைந்துள்ளது. அங்கே ஏராளமான மக்கள் நாள்தோறும் வந்து செல்லும் சூழலில் நிறைய பேர் சிலை முன்பு நின்று புகைப்படங்களையும் எடுத்துக் கொள்வார்கள். அப்படி, ஆதியோகி சிவா சிலை முன்பு தனது மனைவியையும், சிவன் சிலையும் சேர்த்து புகைப்படம் எடுப்பதற்காக அவரது கணவர் ஃபோனில் முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்.

Elderly man trying to take his wife prefect picture netizens reacts

Images are subject to © copyright to their respective owners.

பல கோணங்களில் அவர் மனைவியை புகைப்படம் எடுக்க முயற்சிக்க, நீண்ட நேரம் ஆவதால் தனது கணவரின் செயலை பார்த்துக் கொண்டிருக்கும் மனைவி வெட்கப்பட்டு சிரிக்கவும் தொடங்குகிறார். இது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தை கலக்கி வருவது மட்டுமில்லாமல் பலரையும் மனமுருக வைத்தும் வருகிறது.

வயது கடந்த இந்த தம்பதியர் அன்பு பொழிவதை பற்றி மிகவும் உருக்கத்துடனும் கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

Also Read | "மெஸ்ஸி தான் பெஸ்ட்"... கூச்சலிட்ட சிறுவன்.. ரொனால்டோ கொடுத்த பதில்.. வைரலாகும் வீடியோ..!

Tags : #KOVAI #ISKON TEMPLE #OLD COUPLES #SELFIE #WIFE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Elderly man trying to take his wife prefect picture netizens reacts | Tamil Nadu News.