"மனைவிகிட்ட போக கூடாது, 3 வருஷம் பேசவே கூடாது".. வீடியோவால் சிக்கிய கணவன்.. கோர்ட் வழங்கிய பரபர தீர்ப்பு!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Feb 28, 2023 10:24 PM

நம் சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை உலவிடும் சமயத்தில் நம்மை சுற்றி நடைபெறும் பல்வேறு செய்திகளை குறித்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

Spain man slapped his wife in video streaming court order

                              Images are subject to © copyright to their respective owners

அப்படி இருக்கும் போது மிகவும் வித்தியாசமாக அல்லது இயல்புக்கு மாறாக நடக்கும் விஷயங்கள் தொடர்பான செய்தி பெரிய அளவில் இணையத்தில் பேசு பொருளாகவும் மாறும்.

அந்த வகையில் நடந்த ஒரு சம்பவம் குறித்த செய்தி தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.

ஸ்பெயின் நாட்டின் சொரியா எனும் மாகாணத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய டிக் டாக் நண்பர்கள் சிலருடன் லைவ் ஸ்ட்ரீமிங்கில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் ஏதோ ஒரு விஷயத்திற்காக ஆத்திரம் அடைந்த அந்த பெண்ணின் கணவர், திடீரென தனது மனைவியின் கன்னத்தில் அறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்தப் பெண் கன்னத்தில் அறையப்படுவதை டிக்டாக் லைவ் ஸ்ட்ரீமை கவனித்த பலரும் பார்த்துள்ளனர்.

அதேபோல வீடியோ ஸ்ட்ரீமிங்கில் இந்த சம்பவம் நடந்ததால் இது தொடர்பான வீடியோவும் ஸ்பெயின் நாட்டில் அதிகம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு கை வந்து திடீரென அந்த பெண்ணை அறையும் சமயத்தில் நிலைதடுமாறிப் போனவர் என்ன செய்வது என தெரியாமல் லைவில் கண் கலங்கி போனதாகவும் கூறப்படுகிறது.

அதே போல தனது கணவர் கன்னத்தில் அறைந்த பின்னும் அவர் மீது மனைவி ஏதும் புகார் அளிக்கவில்லை என சொல்லப்படுகிறது ஆனாலும் ஸ்பெயின் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு தண்டனை வலுவாக இருப்பதால், வைரலான வீடியோவின் அடிப்படையில் நீதிமன்றம் மனைவியை கொடுமைப்படுத்தியதாக கூறி ஒரு ஆண்டு சிறைத் தண்டனையை அந்த கணவருக்கு விதித்துள்ளது.

அதே போல கணவர் மனைவியிடம் இருந்து சுமார் 300 அடி தள்ளித் தான் இருக்க வேண்டும் என்றும், 3 ஆண்டுகளுக்கு எதுவும் மனைவியிடம் பேசக் கூடாது என்றும் தீர்ப்பளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் அந்த பெண்ணின் கணவருக்கு ஆயுதங்கள் வாங்குவதற்கான உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags : #HUSBAND #WIFE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Spain man slapped his wife in video streaming court order | World News.